இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து தற்கொலைக்கு தூண்டிய மூன்று வாலிபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் திருச்சி ஐஜி அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை திட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் துரை. இவரது மகள் தமிழழகி(26). கடந்த 2019ம் வருடம் இவருக்கும், பெரிய நாயகிபுரம் பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர் பாலமுருகன் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் ஆகாஷ், விக்னேஷ், மணிகண்டன் ஆகிய 3 பேர் தமிழழகிக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக 2021ம் ஆண்டு ஜூலை மாதம் தமிழழகி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது சாவுக்கு காரணம் அந்த மூன்று நபர்கள் தான் என அவர் கடிதம் எழுதி உள்ளார்.
இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்தனர். அதன் பின்னர் அவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் காலதாமதம் செய்து வருவதாகவும், இதன் காரணமாக மேற்கண்ட வாலிபர்கள் பாதிக்கப்பட்ட தமிழழகி குடும்பத்திற்கு தொடர்ந்த மிரட்டல் விடுத்து வருவதாகவும் குற்றம்சாட்டி, தமிழழகியின் உறவினர்கள் இன்று திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள மத்திய மண்டல ஐஜி அலுவலகம் முன்பு திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், அவர்களை ஐஜி அலுவலகத்திற்கு மனு கொடுக்க அழைத்துச் சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
"சென்னை 28" மூன்றாம் பாகம் வருகிறதா? கங்கை அமரனின் மகன் வெங்கட்பிரபு,தன்னுடைய திரைப்பயணத்தை நடிகராக தொடங்கினார்.உன்னை சரணடைந்தேன்,ஏப்ரல் மாதத்தில்,சிவகாசி உள்ளிட்ட…
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி,ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இத்திரைப்படத்தின் டீசர்…
இந்திய அணியின் மறக்க முடியாத தோல்வி! கடந்த 2000 ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா…
பாஜக - அதிமுக கூட்டணி குறித்து 6 மாதத்திற்கு எந்த ஒரு கேள்வியையும் கேட்க வேண்டாம் என தமிழிசை செளந்தரராஜன்…
பட வாய்ப்புக்காக அலையும் காக்கா முட்டை ரமேஷ் தமிழ் சினிமாவில் 2015-ஆம் ஆண்டு இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான ‘காக்கா…
திருவாரூர் அருகே காதல் திருமணம் செய்த மனைவியைக் கொலை செய்து விட்ட தப்பி ஓடிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.…
This website uses cookies.