இரு குழந்தைகளுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை… விரக்தியை உண்டாக்கிய கணவனின் தொழில்… அதிர்ச்சி சம்பவம்!!!

Author: Babu Lakshmanan
29 May 2023, 4:08 pm

திருச்சியில் 11 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த மனோஜ் குமார். இவரது மனைவி ஷோபனா (26) இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தையும், 11 மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். மனோஜ் குமார் கொடைக்கானலுக்கு வேலைக்கு சென்று வேலை முடித்து நேற்று இரவு வீட்டுக்கு வந்து பார்த்துள்ளார்.

அப்போது வீட்டின் கதவு பூட்டி இருந்ததால் தனது மனைவி தூங்கிக் கொண்டிருப்பதாக நினைத்து கதவு வழியாக உள்ளே சென்று பார்த்த போது, மனைவி மற்றும் குழந்தைகள் மூன்று பேரும் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சோபனாவின் தாய் மற்றும் உறவினர்கள் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், ஆர்டிஓ விசாரணை வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதை அடுத்து ஆர்.டி.ஒ தவச்செல்வம் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் உள்ள உடற்கூறாய்வு அறையில் விசாரணை நடத்தினார்.

கணவர் செய்த வியாபாரத்தில் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டதால் மனம் உடைந்த நிழலில் இருந்த மனைவி சோபனா தனது குழந்தைகளுடன் தூக்கு மாட்டி தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.

  • lokesh kanagaraj decided to take break from social media லோகேஷ் கனகராஜ் எடுத்த திடீர் முடிவு! என்ன சார் கடைசில இப்படி பண்ணிட்டீங்களே?