பெண் தூக்கிட்டு தற்கொலை… அடியாட்களுடன் வந்து கணவனை துவம்சம் செய்த பெண் வீட்டார்… அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

Author: Babu Lakshmanan
2 March 2024, 11:45 am

நாட்றம்பள்ளி அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக பெண் வீட்டார் பெண்ணின் கணவரை அடியாட்களுடன் வந்து சரமாரியாக தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி சுண்ணாம்புகுட்டை பகுதியை சேர்ந்தவர் மாபுப் மகன் லத்தீப். இவர் நாட்டறம்பள்ளி ஆர்சி எஸ் சாலையில் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். இவருக்கும் சாதாஜி என்ற பெண்ணுக்கும் 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மாதம் 22 ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சாதாஜி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பின்னர் அந்தப் பெண்ணுக்கு சற்று மன நிலை சரியில்லை என்று கூறப்படுகிறது. மேலும், கணவர் மற்றும் பெண்ணின் பெற்றோர்கள் இது குறித்து காவல் நிலையத்தில் தெரிவித்தனர். போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பின்பு உறவினரிடம் ஒப்படைத்து நல்லடக்கம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து, பெண்ணின் அக்கா ரேஷ்மா உறவினர்கள் சல்மா 6 பேர் கொண்ட அடியாட்களுடன் லத்தீப்பீன் மெக்கானிக் கடைக்கு சென்று லத்தீபை சரமாரியாக தாக்கியுள்ளனர். இது தொடர்பாக லத்தீப் நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பெண்ணின் உறவினர்கள் லத்தீப்பை தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • GOAT in Small Screens இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக… புத்தாண்டு தினத்தில் ஒளிபரப்பாகும் புதிய திரைப்படம்!!
  • Views: - 243

    0

    0