குழந்தையை தூக்க மறுத்த கணவன்… படுக்கையறையில் தூக்குபோட்ட மனைவி ; பின்னணியில் திருமணம் கடந்த உறவு..!!

Author: Babu Lakshmanan
16 May 2023, 5:09 pm

திருவள்ளூர் ; கள்ளக்காதல் விவகாரத்தில் ஒன்றரை வயது கைக்குழந்தையை விட்டு விட்டு மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் ஒண்டி குப்பம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரசாத் (28). இவர் படப்பை பகுதியில் உள்ள மொபைல் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மற்றும் இவரது உறவுகார பெண்ணான பவானி என்பவருக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் முடிந்த நிலையில், தற்போது ஒன்றரை வயது குழந்தை உள்ளது.

இந்நிலையில், படப்பை பகுதியில் பணியாற்றி வரும் பிரசாந்துக்கு அதே தொழிற்சாலையில் பணிபுரியும் கவிதா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இதனால், பவானி மற்றும் பிரசாத் இருவருக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ள நிலையில், கடந்த ஒரு வருடமாக மனைவியிடம் பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும், கவிதா என்ற பெண்ணுடன் தொடர்பில் இருப்பதால் அடிக்கடி வீட்டிற்கு வராமல் வெளியிலேயே இருந்துள்ளார். இது குறித்து மனைவிக்கு தெரிய வரவே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனிடையியே, கள்ளக்காதலி கவிதா பிரசாத்தின் மனைவிக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, தனக்கும் பிரசாத்திற்கும் திருமணம் முடிந்து விட்டது என்றும், தான் மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும், அவரை ஏன் வீட்டுக்குள் வைத்து பூட்டி வைத்துள்ளீர்கள்..? அவரை விருப்பம் போல் வாழ வழி விடுங்கள், என பிரசாந்தின் மனைவி பவானியிடம் கள்ளகாதலி கவிதா பேசும் ஆடியோ வெளியாகி உள்ளது. மேலும், கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு வருட காலமாக குழந்தையை கூட பிரசாத் தூக்காமல் இருந்துள்ளார். இதனால், அடிக்கடி வாக்குவாதம் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில், நேற்று இரவு கணவனுடன் தொலைபேசியில் பேசிய பவானி, அவரது படுக்கை அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை அறிந்த உறவினர்கள் உடனடியாக பவானியை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தகவல் அறிந்த பவானியின் பெற்றோர் சம்பவம் குறித்து மணவாள நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், கணவர் பிரசாத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் ஆகி ஒன்றரை வயது குழந்தை இருக்கும் நிலையில், கணவன் மற்றொரு பெண்ணை தொடர்பு இருப்பதாக மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 584

    0

    0