டியூசனுக்கு வரும் மாணவர்களிடம் ஆபாச வீடியோ காட்டி உல்லாசம் அனுபவித்த ஆசிரியை.. வீடியோ எடுத்து ரசித்த கள்ளக்காதலன் : அதிர வைத்த சம்பவம் !!

Author: Udayachandran RadhaKrishnan
2 April 2022, 6:39 pm

மதுரை : டீயூசனுக்கு வரும் பள்ளி மாணவர்களிடம் ஆபாச வீடியோ காட்டி மயக்கி உல்லாசமாக இருந்த பெண் ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

மதுரையைச் சேர்ந்த பெண் ஒருவர் 3 மாணவர்களுடன் உல்லாசமாக இருக்கும் ஆபாச வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகியது. இது குறித்து மதுரை மாநகர போலீசாருக்கு தகவல் வந்தது.

ஆபாச வீடியோ வெளியான விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநகர போலீஸ் கமி‌ஷனர் செந்தில் குமார், துணை கமி‌ஷனர் தங்கதுரை, உதவி கமி‌ஷனர் அக்பர்கான் ஆகியோர் உத்தரவிட்டனர். அதன் பேரில் மதுரை தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

மாணவர்களுடன், பெண் உல்லாசமாக இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறதா? என்று சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் கண்காணித்து வந்தனர். இந்தநிலையில் அந்த வீடியோ திருப்பரங்குன்றம் பாலாஜி நகரைச் சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவரின் செல்போனுக்கு வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அந்த மாணவரை வரவழைத்து அந்த ஆபாச வீடியோவை அனுப்பியது யார்? என்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த வீடியோவை தனது மாமா வீரமணி (வயது 39) என்பவர் அனுப்பியதாக தெரிவித்தார்.

அதன்பேரில் தனக்கன்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த வீரமணியை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது மாணவர்களுடன் பெண் உல்லாசமாக இருக்கும் வீடியோவை தான் எடுத்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

விசாரணையில் அவர் வெளியிட்ட தகவல் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தனக்கன்குளத்தில் உள்ள தளச்செங்கல் கடையில் வீரமணி பணிபுரிந்து வருகிறார். அவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2010-ம் ஆண்டு சென்னைக்கு ரெயிலில் சென்றார். அப்போது அவருக்கு மதுரையைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியையான 45 வயது பெண் அறிமுகமானார்.

இதையடுத்து அவர்கள் தங்களின் செல்போன் எண்களை பறிமாறிக் கொண்டனர். அதன்பிறகு இருவரும் அடிக்கடி செல்போனில் பேசியபடி இருந்தனர். இதனால் அவர்களுக்கு இடையே நெருக்கம் அதிகமாகி கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

ஆசிரியையின் வீட்டிற்கு வீரமணி அடிக்கடி சென்று வந்துள்ளார். இவர்களது கள்ளத்தொடர்பு விவகாரம் ஆசிரியையின் கணவருக்கு தெரிந்துள்ளது. இதையடுத்து அவர் ஆசிரியையை பிரிந்து சென்று விட்டார். அதன் பிறகு கல்லூரி படித்து வரும் தனது மகனுடன் ஆசிரியை தனியாக வசித்து வந்தார். கணவர் பிரிந்து சென்றபிறகு வீரமணியுடனான தொடர்பை ஆசிரியை அதிகரித்துக் கொண்டார்.

இந்தநிலையில் அந்த ஆசிரியைக்கு ஆபாச படம் பார்ப்பதில் விருப்பம் ஏற்பட்டுள்ளது. அதில் பார்க்கும் காட்சிகளை போன்று தான் இருக்க வேண்டும் என நினைத்துள்ளார். அந்த ஆசிரியை தனது வீட்டில் ஏராளமான மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வந்துள்ளார்.

இதனால் தன்னிடம் படிக்க வந்த பள்ளி மாணவர்கள் 2 பேருக்கு செல்போனில் ஆபாச படம் அனுப்பி, அவர்களை தனது ஆசை வலையில் வீழ்த்தினார். அந்த பள்ளி மாணவர்கள் 2 பேர் மற்றும்  கல்லூரி மாணவர் ஒருவர் என 3 பேரை வரவழைத்து உல்லாசம் அனுபவித்தபடி இருந்துள்ளார்.

மேலும் மாணவர்களுடன் உல்லாசமாக இருந்ததை தனது கள்ளக்காதலன் வீரமணி மூலமாக வீடியோ எடுத்திருக்கிறார். அந்த வீடியோவை ஆசிரியை பார்த்து ரசித்தபடி இருந்துள்ளார். இதேபோல் மாணவர்களுடன் பலமுறை நெருக்கமாக இருந்து, அதனை வீடியோ எடுத்திருக்கிறார்.

அப்படி எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றைத்தான் வீரமணி தனது மருமகனுக்கு அனுப்பி இருக்கிறார். இதனால் போலீசில் வீரமணி சிக்கி இருக்கிறார். மேற்கண்ட விவரங்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

மாணவர்களுடன், ஆசிரியை உல்லாசமாக இருந்த வீடியோவை பரப்பிய வீரமணி மற்றும் ஆசிரியை மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிந்தனர். அவர்களில் வீரமணி கைது செய்யப்பட்டார். ஆசிரியையிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் ஆசிரியை பயன்படுத்திய செல்போன்கள் மற்றும் லேப்டாப், கம்ப்யூட்டர் உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் 50-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்தன. ஆசிரியையிடம் டியூசன் படித்த 10-க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 1582

    0

    0