ரூ.1000 கொடுத்தால் இறப்பு சான்றிதழ் தருவேன்.. அடம்பிடித்த பெண் விஏஓ : காத்திருந்த ட்விஸ்ட்..ஷாக் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
24 July 2023, 4:17 pm

விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகேயுள்ள டட் நகர் கிராமத்தை சார்ந்த அன்னம்மாள் என்பவரின் மாமனார் மாணிக்கம் மற்றும் கணவரின் சகோதரர் சவரி முத்து ஆகிய இருவரும் 35 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டதால் அவர்களுக்கு இறப்பு சான்றிதழ் விண்ணப்பிப்பதற்காக அத்தியூர் திருக்கை கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பித்துள்ளனர்.

அதற்கு அரியலூர் திருக்கை கிராம நிர்வாக அலுவலராக உள்ள சங்கீதா மனுவிற்கு 500 ரூபாய் வீதம் ஆயிரம் ரூபாய் லட்சமாக வழங்க வேண்டும் அப்போது தான் ஆன்லைனில் விண்ணபித்து தருவேன் என கூறியுள்ளார்.

இதனையடுத்து லஞ்சமாக பணம் கொடுத்து இறப்பு சான்றிதழ் பெற மனமில்லாமல் அன்னம்மாள் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் 23.7.2023 நேற்றைய தினம் புகாரளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் இன்று அன்னமாளிடம் ஆயிரம் ரூபாயை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் ரசாயனம் கலந்து கொடுத்து கொடுக்க கூறியுள்ளனர்.

அதன் பேரில் அன்னமாள் இன்று அரியலூர் திருக்கையிலுள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் வி ஏ ஓ சங்கிதாவிடம் ஆயிரம் ரூபாய் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் வி ஏ ஓ சங்கீதாவை கையும் களவுமாக பிடித்து வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

  • income tax department sent notice to empuraan director prithviraj பிரித்விராஜ்ஜுக்கு வந்த நோட்டீஸ்; கவர்மெண்ட்டு வேலையை காட்டிருச்சு- பொங்கும் நெட்டிசன்கள்…