ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண் : கண்ணிமைக்கும் நேரத்தில் கடவுள் போல வந்த காவலர்.. வைரல் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
22 September 2022, 12:45 pm

திருச்சி ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏறிய பெண்ணை தவறி விழுந்த நிலையில் காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை காவலர் சிசிடிவி காட்சி

திருச்சி ஜங்ஷன் ரயில்வே நிலையத்தில் சென்னையிலிருந்து குருவாயூர் செல்லக்கூடிய ரயில் ரயில் நிலையத்திற்கு வந்து நின்றது. மீண்டும் நடைமேடை எண் 4ல் இருந்து ரயில் புறப்பட்ட பொழுது கடைசி நேரத்தில் 45 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் தோளில் பை ஒற்றை மாட்டிக்கொண்டு ஓடும் ரயிலில் ஏற முற்பட்டார்.

படியில் ஏறிய உடன் அவர் பின்பக்கமாக சாய்ந்து விழுந்து ரயிலுக்கும் தண்டாவாளத்திற்க்கும் உள்ள இடைவெளியில் சிக்க இருந்தார். அதைப் பார்த்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர் சதீஷ்குமார் அவரைக் காப்பாற்றி இழுத்து பிளாட்பாரத்தில் விட்டார்.

இந்த காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது. அங்கிருந்த பயணிகள் அனைவரும் அக்காவலரை பாராட்டினர்.

https://vimeo.com/752427691

கடைசி நேரத்தில் வந்து ஓடும் ரயில் ஏன் ஏறுகிறீர்கள் என அறிவுரை கூறி அமர வைத்தனர். இக்காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்