என்னை தேடாதிங்க முதல் கணவருக்கு தெரியாமல் பனியன் கம்பெனியில் ஏற்பட்ட காதலால் இரண்டாவது திருமணம் முடித்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே எட்டி குளத்துப்பட்டியை சேர்ந்தவர் ஆனந்த் வயது (வயது 30 ). ஊர்க்காவல் படையில் வேலை பார்த்து வந்த இவர் தற்போது தனியார் சோலார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கும் பாடியுரைச் சேர்ந்த வீரழகு என்பவருக்கும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லாததால் கணவன் மனைவியிடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் வீரழகு தனியார் பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்றுள்ளார் பின்னர் கடந்த மூன்று மாதமாக கணவரை விட்டு பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது மனைவி வீரழகுவை பார்க்க ஆனந்த் தனது மாமனார் வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் வீரழகு வீட்டில் இல்லை எனக் கூறப்படுகிறது.
இது குறித்து தனது மாமனார் இடம் கேட்ட போது அவர் முறையான பதில் அளிக்கவில்லை. அதனால் தனது மனைவியின் செல்போனுக்கு போன் செய்த போதும் நாட் ரீச்சபிள் என வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆனந்தின் வாட்ஸ் அப்பிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதை ஓபன் செய்து பார்த்த போது ஆனந்தின் மனைவி வீர அழகு அதில் வேறொரு வாலிபரை திருமணம் செய்து கொண்டது போன்ற புகைப்படம் இருந்துள்ளது.
இதில் தான் வேறு ஒரு திருமணம் செய்து கொண்டேன். இனிமேல் என்னை தேடி வர வேண்டாம் எனவும் அவரது மனைவி செல்போனில் பதிவிட்டு இருந்தார்
இதைப் பார்த்ததும் ஆனந்த் அதிர்ச்சி அடைந்தார்.
தன்னை விட்டு பிரிந்து விட்டு மூன்று மாதமாக பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்ற மனைவி வேறுநபருடன் பழக்கம் ஏற்பட்டு வேறு வாலிபரை திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது.
இதனை அடுத்து ஆனந்த் வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தனது மனைவியை வேறு ஒருநபர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும் அவரிடமிருந்து பிரித்து தன்னிடம் அவரை சேர்த்து வைக்க வேண்டும் எனவும் புகார் அளித்திருந்தார்.
அதன் பேரில் வீரழகு எங்கு உள்ளார் யாரை திருமணம் செய்துள்ளார். இதற்க்கு காரணமாணவர்கள் யார் என்பது குறித்து வடமதுரை போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.