மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கி விற்பனை செய்த பெண்… கைது செய்து போலீசார் நடவடிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
14 July 2023, 9:12 pm

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அரும்பருத்தி கிராமத்தில் வீட்டில் பதுக்கி வைத்து அரசு மது பாட்டில்கள் விற்பதாக திருவலம் போலீசாருக்கு வந்த ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து திருவலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிலம்பரசன், காவலர்கள் செந்தில், சுந்தர், பெண் காவலர்கள் ஆனந்தி, சங்கீதா, ஆகியோர் அரும்பருத்தி கிராமத்தில் சோதனை மேற்கொண்டனர்.

அப்பொழுது அரும்பருத்தி கிராமம் திரௌபதி அம்மன் கோவில் தெரு பகுதியில் விஜயா (56) என்பவர் வீட்டில் அரசு மது பாட்டில்கள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தெரிய வந்தது.

இதனை அடுத்து போலீசார் விஜயாவை கைது செய்து அவரிடமிருந்து 83 அரசு மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து காட்பாடி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்

  • Game Changer Shankar songs cost“கேம் சேஞ்சர்”பட பாடலுக்கு இத்தனை செலவா…கோடிகளை மட்டுமே குறிவைக்கும் சங்கர்..!
  • Views: - 422

    0

    0