காவல்நிலைய கழிவறை அருகே துண்டிக்கப்பட்ட பெண்ணின் தலை : உச்சக்கப்பட்ட பரபரப்பில் போலீஸ்.. விசாரணையில் பகீர்…!!

Author: Udayachandran RadhaKrishnan
30 August 2022, 10:09 am

விழுப்புரம் நகர காவல் நிலைய கழிவறை அருகே துண்டிக்கப்பட்ட பெண்ணின் தலை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

விழுப்புரம் நகர மையப் பகுதியில் அமைந்துள்ளது விழுப்புரம் நகர காவல் நிலையம்.. எப்பொழுதும் ஆள் நடமாட்டத்துடன் பரபரப்புடன் காணப்படும் இந்த விழுப்புரம் நகர காவல் நிலைய பின்பகுதியில் உள்ள பயன்படுத்தப்படாத கழிவறை அருகே பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு தலைப்பகுதி மட்டும் கிடப்பதாக திடீரென தகவல் காட்டு தீ போல் பரவியது..

இதனைக் கண்ட அந்த காவல் நிலைய காவலர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து விழுப்புரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையிலான போலீஸார் அந்த பகுதியில் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

அப்போது நகர காவல் நிலைய வளாகத்தில் காவல் நிலையம் பின்புறம் அடையாளம் தெரியாத நிலையில் பெண் ஒருவரின் தலைப்பகுதி மட்டும் ஒன்று கிடந்தது‌‌. இதனால் போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனை தொடர்ந்து டிஎஸ்பி பார்த்திபன் விசாரணையை தீவிரப்படுத்தினார். மேலும் தலை மட்டும் எப்படி கீழே கிடந்தது என்று தீவிர விசாரணை மேற்கொண்டதில், விழுப்புரம் நகரில் கடந்த 2020-ஆம் ஆண்டு அடையாளம் தெரியாத பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரை அடையாளம் காணுவதற்காக அந்த உடலில் இருந்த தலை பாகம் மட்டும் போலீஸார் பகுப்பாய்வு கூடதற்கு ஆய்வு செய்ய அனுப்பி மீண்டும் அதனைப் பெற்று பதப்படுத்தி அங்குள்ள அதாவது காவல் நிலைய பின்பகுதியில் உள்ள பயன்படுத்தப்படாத கழிவறையில் ரசாயனம் போடப்பட்ட ஒரு பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்ததாகவும் அது எப்படி வெளியே வந்தது என்று தெரியாமல் காவல்துறையினர் மேலும் விசாரணை தீவிர்படுத்தி உள்ளனர்.

இதுகுறித்து ஒரு அறிக்கையும் விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து தற்போது நள்ளிரவில் வெளியிடப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் காவல் நிலையத்தில் பெண் தலைப்பகுதி மட்டும் துண்டிக்கப்பட்டு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 437

    0

    0