காருக்குள் நடந்த சோதனை.. வசமாக சிக்கிய பெண் : உடனிருந்த வாலிபர்கள் கைது!

Author: Udayachandran RadhaKrishnan
18 December 2024, 7:46 pm

தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள வடக்கு காவல் நிலைய போலீசாருக்கு குமுளி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கஞ்சா கடத்திச் செல்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

தகவலினை தொடர்ந்து விரைந்து சென்ற போலீசார் தீவிர வாகன தனிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே சந்தேகப்படும் படியாக சொகுசு காரில் வந்த பெண் உள்பட நான்கு பேரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர்.

தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை செய்ததில் அவர்கள் சுமார் 22 கிலோ கஞ்சாவினை கேரளாவிற்கு விற்பனை செய்வதற்காக ஆந்திராவிலிருந்து வாங்கி வந்தது தெரியவந்துள்ளது.

இதையும் படியுங்க: அவர் பெயரை உச்சரித்துக் கொண்டே இருப்போம்… அமித்ஷாவுக்கு விஜய் பதிலடி!

இது குறித்து வழக்கு பதிவு செய்த கூடலூர் வடக்கு காவல் நிலைய போலிசார் பண்ணைபுரத்தைச் சேர்ந்த இலக்கியா காமய கவுண்டன்பட்டியைச் சேர்ந்த தினேஷ்குமார், உத்தம பாளையத்தைச் சேர்ந்த சரவணகுமார் மற்றும் அனுமந்தன்பட்டியைச் சேர்ந்த ரவிக்குமார் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 22 கிலோ கஞ்சா மற்றும் சொகுசு காரினை பறிமுதல் செய்துள்ளனர்.

car seized for smuggling cannabis

மேலும் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக விசாரணை செய்து தேடி வருகின்றனர்.

  • Lokesh Kanagaraj Mr. Bharat movie ரஜினி பட பெயரை தட்டி தூக்கிய லோகேஷ்… வெளியானது அடுத்த படத்தின் PROMO!
  • Views: - 30

    0

    0

    Leave a Reply