‘கஷ்டப்படுறதுனால தான் மகளிர் குழு-ல லோனே வாங்குறோம்… இதைய காரணமா சொல்லலமா..?’ – ரூ.1000 கிடைக்காத பெண்கள் ஆதங்கம்…!

Author: Babu Lakshmanan
19 October 2023, 4:46 pm

வசதியானவங்களுக்கே ரூ.1000 வந்திருக்கு… சொன்னபடி, வாக்குறுதிய நிறைவேத்தனும்… தேனி ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் தர்ணா..!!

தேனி ; தகுதியுள்ள மகளிருக்கு கலைஞர் உரிமைத்தொகை கிடைக்கவில்லை என ஏராளமான பெண்கள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என தேர்தல் வாக்குறுதியாக திமுக அரசு அறிவித்தது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சரும் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளை கண்டறிந்து அவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

இந்நிலையில், தேனி மாவட்டம் போடி பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் தங்களுக்கு ஆயிரம் ரூபாய் மகளிர் தொகை கிடைக்கவில்லை எனக் கூறி ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டம் செய்தனர்.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த ஆயிரம் ரூபாய், பாதி பெண்களுக்கு மட்டும் கிடைத்துள்ளதாகவும், ஏராளமான பெண்களுக்கு கிடைக்கவில்லை என்றும், தகுதியுள்ள ஏழ்மை நிலையில் உள்ள எங்களுக்கு மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் கிடைக்கவில்லை என்றும், தகுதி வாய்ந்த வசதி படைத்தவர்களுக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் கிடைத்திருப்பதாக குற்றச்சாட்டாக கூறினார்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, மகளிர் கடன் பெற்றுள்ளதால் தங்களுக்கு ஆயிரம் ரூபாய் நிராகரிக்கப்பட்டதாக கூறுவதாக பெண்கள் கூறுகின்றனர். மேலும், அனைத்து மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் கொடுங்கள் இல்லை என்றால், அனைவருக்கும் ரத்து செய்து விடுங்கள், என ஆயிரம் ரூபாய் கிடைக்காத பெண்கள் தங்களது ஆதங்கத்தை தெரிவித்தனர்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?