ரயில் போல குலுங்கி குலுங்கி சென்ற டிராக்டர்… தொங்கியபடி பயணித்த பெண்கள் ; அதிர்ச்சி வீடியோ!!!

Author: Babu Lakshmanan
15 February 2024, 10:01 pm

ரயில் போல குலுங்கி குலுங்கி சென்ற டிராக்டர்… தொங்கியபடி பயணித்த பெண்கள் ; அதிர்ச்சி வீடியோ!!!

ஆபத்தை உணராமல் டிராக்டரில் தொங்கியபடி பெண்கள் பயணித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

போக்குவரத்து விதிமுறை படி சுமைகள் ஏற்றும் வாகனங்களில் ஆட்களை வைத்து பயணம் செய்யக் கூடாது என்ற தடை இருக்கிறது. ஆனால், அதையும் மீறி ஒரு சிலர் சுமையேற்றும் வாகனங்களில் ஆபத்தை உணராமல் பயணம் செய்து வருகிறார்கள்.

அது போன்று, புதுச்சேரியில் இன்று ஆபத்தை உணராமல் டிராக்டரில் தொங்கியபடி 10 பெண்கள் பயணம் செய்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அதாவது டிராக்டரில் இன்று கடலூர் சாலையில் இருந்து நகரப்பகுதியில் கூலி வேலைக்கு செல்லும் பெண்கள் தங்களது மண்வெட்டிகளை டிராக்டர் முன்பக்கம் மாட்டிவிட்டு, எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் டிராக்டரின் மேல் உள்ள குடையை பிடித்து தொங்கியபடி பயணம் செய்தனர். இதனை வீதியில் சென்ற வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பார்த்து இது ஆபத்தான பயணம் தானே என்று முணுமுணுத்தபடி சென்றனர்.

அதுமட்டும் இல்லாமல் அவர்கள் நகரப்பகுதியில் உள்ள ஐந்துக்கும் மேற்பட்ட போக்குவரத்து சிக்னல்களை தாண்டி வருகின்றனர். ஆனால், போக்குவரத்து காவலர்கள் அந்த டிராக்டரை பார்த்தும் எந்தவித ரியாக்ஷனும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி