பொதுமக்களிடம் அநாகரீகம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த அலட்சியம்: அதிரச் செய்த குற்றச்சாட்டு…!!

Author: Sudha
19 August 2024, 3:55 pm

திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குறை தீர்ப்பு கூட்டத்திற்கு திருப்பூர் மாவட்டத்தில் இருந்து பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது பிரச்சனைகளை மனுவாக அளிக்க வருவது வழக்கம் அந்த வகையில் இன்று திருப்பூர் வாவிபாளையம் பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி, சுகன்யா,பாலாமணி,ஆகியோர் உறவினர் சாலை விபத்தில் உயிரிழந்ததற்காக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜை சந்தித்து மனு அளிக்க வந்தனர் .

பொதுமக்கள் அளிக்கும் மனுவை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகள் இவர்களின் மனுவை சரி பார்க்காமல் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காக்க வைத்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட நேரம் நிற்பதாக ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் சக்கரவர்த்தி என்பவரிடம் பாதிக்கப்பட்ட பெண்கள் கேட்க அதிகாரி சக்ரவர்த்தி பெண்களிடம் தரக்குறைவாக பேசியதோடு தனது இருக்கையை விட்டு எழுந்து மனு அளித்த பெண்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது. இச்சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த மே மாதம் தனது கணவர் விபத்தில் இறந்ததாகவும் அவர் விபத்தில் இறந்தபோது ஓட்டி வந்த வாகனத்தை கடந்த கேட்டு இரண்டு மாதங்களாக காவல் நிலையத்தில் கேட்டு வருகிறோம் ஆனால் பெண்கள் என்பதால் மிகவும் அலட்சியப்படுத்துவதாகவும் அதேபோன்று இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் அலட்சியப்படுத்துவதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் தெரிவித்தனர்.

பொதுமக்களிடம் மனுவை பதிவிடும் அதிகாரிகள் அலட்சியமாகவும் , அநாகரீகமாக நடந்து கொள்ளும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

  • Maharaja movie box office in China பிராமண்டத்தை ஓரங்கட்டிய விஜய் சேதுபதி.. சீன பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டும் VJS!
  • Views: - 1316

    0

    0