மகளிர் உரிமைத்தொகை எங்கே? கைக்குழந்தைகளுடன் படையெடுத்த பெண்கள் : ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
30 October 2023, 5:31 pm

மகளிர் உரிமைத்தொகை எங்கே? கைக்குழந்தைகளுடன் படையெடுத்த பெண்கள் : ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள புதங்காரம் பட்டி இப்பகுதியில் 400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தமிழக அரசு வழங்க கூடிய பெண்களுக்கு ஆன உரிமை தொகை ஆயிரம் ரூபாய் புது புகரம்பட்டியை சேர்ந்த சுமார் 150க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வரவில்லை எனவும், பலமுறை வேடசந்தூர் தாலுகா அலுவலகத்தில் சென்று மனு அளித்தும் பலனில்லை என கூறினர்.

தற்போது வரை தங்களுக்கு ஆயிரம் ரூபாய் வரவில்லை எனவும் தங்களுக்கு தமிழக அரசு வழங்கக்கூடிய ஆயிரம் ரூபாய் கிடைக்க வேண்டும் என சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் கைக்குழந்தையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்

  • actress Abort his Fetus After Famous Actor Warned வாரிசு நடிகருடன் கூத்து… கருவை சுமந்த நடிகை : காத்திருந்த டுவிஸ்ட்!