பணம் கொடுப்பதாக கூறி திமுக கூட்டத்துக்கு அழைத்து வரப்பட்ட பெண்கள்.. டோக்கன் கொடுத்து ஏமாற்றியதாக புகார்!
Author: Udayachandran RadhaKrishnan28 March 2024, 4:59 pm
பணம் கொடுப்பதாக கூறி திமுக கூட்டத்துக்கு அழைத்து வரப்பட்ட பெண்கள்.. டோக்கன் கொடுத்து ஏமாற்றியதாக புகார்!
தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றிய பகுதிகளான G.கெங்குவார்பட்டி, தேவதானப்பட்டி, சில்வார்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, குள்ளப்புரம் உள்ளிட்ட 12 கிராமங்களில் காலை 9 மணி முதல் தேனி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தனது ஆதரவாளர்களுடன் பரப்புரை மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பரப்புரையின் போது ஒரு இடத்தில் மக்களைக் கூட்டுவதற்காக பெரும்பாலான அரசியல் கட்சிகள் 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை கொடுத்துத்தான் கூட்டம் கூட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் பொம்மிநாயக்கன்பட்டியில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக திமுக கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் 100 ரூபாய் தருவதாக டோக்கன் கொடுத்து அழைத்து வந்ததாகவும், பிரச்சாரத்திற்குப் பின்பு ஒரு சில பெண்களுக்கு மட்டும் பணம் கொடுத்து விட்டு தங்களுக்கு கொடுக்கவில்லை எனக் கூறி அவர்கள் கொடுத்த டோக்கனுடன் தங்களை ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டினர்.
மேலும் திமுக உறுப்பினர்கள் பிரச்சாரக் கூட்டத்திற்கு வருகை தந்த பெண்களுக்கு கையில் பணத்தை கட்டாக வைத்துக் கொண்டு 100 ரூபாய் கொடுக்கும் வீடியோவும் வெளியாகி உள்ளது.
தேர்தல் என்றாலே வேட்பாளர் ஒரு இடத்தில் வந்து பேசுவதற்காக கூட்டத்தைக் கூட்டுவதற்கு பணம் கொடுத்து தான் கூட்டத்தை கூட்டுகிறார்கள் என்பது இதன் மூலம் உறுதியாகி உள்ளது. இருந்தாலும் பிரசார கூட்டத்திற்கு பணம் தருவதாக அழைத்து வந்து டோக்கன் கொடுத்து விட்டு வேலை முடிந்ததும் பணம் தராமல் சென்றதாக அப்பகுதி பெண்கள் வேதனை அடைந்துள்ளனர்.