சாலையில் நடந்து சென்ற பெண்களிடம் பாலியல் சீண்டல்.. வடமாநில இளைஞருக்கு தர்ம அடி : பழனியில் பரபரப்பு..!!!

Author: Udayachandran RadhaKrishnan
11 March 2024, 11:39 am

சாலையில் நடந்து சென்ற பெண்களிடம் பாலியல் சீண்டல்.. வடமாநில இளைஞருக்கு தர்ம அடி : பழனியில் பரபரப்பு..!!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி சாமி தியேட்டர் அருகில் போதையில் வந்த வட மாநில இளைஞர் பெண்களிடம் தவறாக நடந்ததாக கூறப்படுகிறது.

இதனால் பெண் ஒருவர் கூச்சலிட்டு ஓடியுள்ளார். இதை கண்ட அருகில் இருந்த பொதுமக்கள் ஒன்று கூடி போதையில் இருந்த நபரை அடித்து உதைத்து கம்பத்தில் கட்டி வைத்தனர்.

தகவல் அறிந்து வந்த பழனி நகர காவல் நிலைய போலீசார் வட மாநில இளைஞரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். போலீசாரின் விசாரணையில் பிடிபட்ட நபர் பீகாரைச் சேர்ந்த பாஸ்வான் என்பதும் பழனி அருகே தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருவதாக முதல்கட்மாக தெரியவந்தது.

இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பழனியில் குடிபோதையில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற வட மாநில இளைஞரை பொதுமக்கள் கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Anirudh updates on Vidamuyarchiஅனிருத் வெளியிட்ட “விடாமுயற்சி” மாஸ் அப்டேட்…அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!
  • Views: - 248

    0

    0