மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவது உறுதி, அதில் சந்தேகம் வேண்டாம் : ஸ்டாலின்!!!
Author: kavin kumar13 February 2022, 10:37 pm
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் தேர்தல் வாக்குறுதியின்படி மகளிருக்கு ஆயிரம் ரூபாய் நிச்சயம் வழங்கப்படும். வாக்குறுதி அளித்தால் ஏமாற்றமாட்டேன் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், பெரிய மருதும், சின்ன மருதும், ஹைதர் அலியும், திப்பு சுல்தானும், வீர மங்கை வேலுநாச்சியாரும் உலவிய மண் திண்டுக்கல் மண் என தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், தேர்தல் வாக்குறுதியின்படி மகளிருக்கு ஆயிரம் ரூபாய் நிச்சயம் வழங்கப்படும். வாக்குறுதி அளித்தால் ஏமாற்றமாட்டேன். அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.