ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் தின கொண்டாட்டம் : பெண் பணியாளர்களுடன் இணைந்து மரம் நடவு செய்த மாவட்ட ஆட்சியர்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 March 2022, 6:31 pm

கோவை : மகளிர் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், காவல் ஆணையாளர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் மகளிர் பணியாளர்களுடன் இணைந்து மரக் கன்றுகளை நட்டனர்.

உலக மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் மகளிர் பணியாளர்களுடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நகரத்தினம், வருவாய் அலுவலர் லீலா அலக்ஸ் ஆகியோர் ஆட்சியர் அலுவலக வளாத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வில்வமரம், மகிழமரம் உட்பட 5 வகை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. இதில் மாவடட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் 50க்கும் மேற்பட்ட பெண் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களுக்கு மாவடட் ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், காவல் ஆணையர், காவல் கண்காணிப்பாளர் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர். மகளிர் தினத்தில் மரக்கன்று நடும் நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டது மகிழ்ச்சியளிப்பதாக பணியாளர்கள் தெரிவித்தனர்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 1334

    0

    0