மகளிர் உரிமைத்தொகை வெறும் டெபிட் கார்டு அல்ல.. பெண்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய துருப்பு சீட்டு : உதயநிதி பேச்சு!

Author: Udayachandran RadhaKrishnan
25 September 2023, 1:28 pm

மகளிர் உரிமைத்தொகை வெறும் டெபிட் கார்டு அல்ல.. பெண்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய துருப்பு சீட்டு : உதயநிதி பேச்சு!

கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளியில் தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் 500 மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 பெறுவதற்கான ஏடிஎம் கார்டுகள் மற்றும் தகவல் கையேடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மகளிருக்கு ஏடிஎம் கார்டுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில்..

இந்திய ஒன்றியமே திரும்பிப் பார்க்கும் முன்னோடி திட்டம் தான் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்றும், இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்படும் டெபிட் கார்டு வெறும் டெபிட் கார்டு அல்ல., இது மகளிரின் வாழ்க்கையை மாற்றும் துருப்பு சீட்டு என்று பெருமிதத்தோடு தெரிவித்தார்.

மேலும் நம்மை பின்பற்றி கர்நாடகா, தெலுங்கானாவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றும், பெண்களின் முன்னேற்றம்., கலாச்சாரம், சட்டம், பொருளாதாரம் ஆகிய மூன்று வழியில் தடுக்கப்படுகிறது என பெரியார் கூறியிருந்தார்.

ஆனால் தற்போது திமுக.,வின் தொடர் பிரச்சாரத்தினால், மகளிர் உரிமைத் தொகை, பெண்களுக்கு சொத்தில் சமபங்கு மற்றும் விதவைக் கோலம் ஒழிப்பு, உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வந்து பெண்கள் சுதந்திரமாக செயல்பட திமுக அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது தெரிவித்தார்.

பொருளாதாரத்தில் பெண்கள் முன்னேறுவது குடும்பத்திற்கும், சமூகத்திற்கும், நாட்டிற்கும் முக்கியமானது என தெரிவித்த அமைச்சர் உதயநிதி, பெண்கள் சுதந்திரமாக செயல்பட பெண்கள் அரசியல் பேச வேண்டும், பெண்கள் படிக்க வேண்டும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி.சரயு, பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன், தளி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 314

    0

    0