பொன்முடி மீண்டும் அமைச்சராக வேண்டி பால்குடம் எடுத்த பெண்கள் : அன்னதானம் வழங்கி கோவிலில் சிறப்பு வழிபாடு!!

Author: Udayachandran RadhaKrishnan
26 December 2023, 3:56 pm

பொன்முடி மீண்டும் அமைச்சராக வேண்டி பால்குடம் எடுத்த பெண்கள் : அன்னதானம் வழங்கி கோவிலில் சிறப்பு வழிபாடு!!

தமிழகத்தின் உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறை தண்டனையை மேல் முறையீடு செய்வதற்காக சென்னை நீதிமன்றதம் ஒரு மாதம் தீர்ப்பையும் நிறுத்தி வைத்துள்ளது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மீண்டும் அமைச்சராக வேண்டுமான விழுப்புரத்தில் உள்ள திமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சித்திலிங்கமடம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக உமா மகேஸ்வரி சதீஷ்குமார் தலைமையில் திமுக தொண்டர்கள் மீண்டும் பொன்முடி அமைச்சராக வேண்டி 108 பால் குடங்கள் எடுத்தனர்.

பொன்முடி அமைச்சராக வேண்டி பெண்கள் திமுக தொண்டர்கள் பால்குடத்தினை ஊர்வலமாக எடுத்து சென்று விசாலாட்சி சமேத விநாயகர் பாரீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அதன் பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கினர்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!