நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் தீவிரம்: மின்னணு வாக்கு இயந்திரங்களுக்கு சின்னங்கள் பொருத்தும் பணி தொடக்கம்..!!

Author: Rajesh
11 February 2022, 3:21 pm

கோவை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி கோவையில் மிண்னணு வாக்கு இயந்திரங்களுக்கு சின்னங்கள் பொருத்தும் பணி துவங்கியது.

தமிழகத்தில் வருகின்ற 19ம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கோவை மாவட்டத்தில் மிண்னணு வாக்கு இயந்திரங்களுக்கு சின்னங்கள் பொருத்தும் பணிகள் துவங்கியுள்ளன. மிண்ணனு வாக்கு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு பழுது நீக்கப்பட்டு சின்னங்கள் பொருத்தப்பட்டு சீல் வைத்து எடுத்து வைக்கப்பட்டு வருகின்றன.

இப்பணிகள் நிறைவடைந்தவுடன் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், தேர்தல் மேற்பார்வையாளர்கள் ஆய்வு மேற்கொண்ட பின் அந்தந்த வாக்கு சாவடிகளுக்கு எடுத்து செல்லப்படும். அதுவரை பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளன. இதனால் இம்மிண்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறை மற்றும் அறையை சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கு 1290 வாக்கு சாவடிகள், 33 பேரூராட்சிகளுக்கு 632 வாக்குசாவடிகள், 7 நகராட்சிகளுக்கு 390 வாக்குசாவடிகள் என மொத்தம் 2312 வாக்குசாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன எனபது குறிப்பிடத்தக்கது.

  • Anirudh is in love with the daughter of a famous businessman. பிரபல தொழிலதிபரின் மகளை காதலிக்கும் அனிருத்.? இவங்களுக்குள்ள இப்படி ஒரு கனெக்ஷனா?