’தவெகவில் சாதி பார்க்குறாங்க..’ விஜய் உள்ளே இருக்கும்போது வெளியே குமுறிய தொண்டர்கள்!
Author: Hariharasudhan1 February 2025, 2:41 pm
சாதி பார்த்து பதவி வழங்கப்படுவதாக தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சிலர் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
சென்னை: இது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட தவெகவினர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நாங்கள் மாநாடு நேரத்தில் மூன்று நாட்கள் பேருந்திலே தூங்கி எழுந்து உழைத்துள்ளோம். கடந்த ஒரு வருடமாக சென்னைக்கு, கட்சி அலுவலகத்துக்கு வந்துவந்து செல்கிறோம்.
எங்களுக்கு நியாயம் வேண்டும். மாவட்டச் செயலாளரை நியமிக்கும்போது, ஒன்றியம், நகரம் அளவில் உள்ள பொறுப்பாளர்களிடம் கலந்து ஆலோசித்து பதவி வழங்க வேண்டும். BC பிரிவினருக்கு பதவி வழங்க வேண்டும் எனக் கூறிக்கொண்டு, தூங்கிக் கொண்டிருந்தவரிடம் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.
அவரிடம் சென்று கேட்டால், நான் எங்க ஆளுக்குத்தான் (BC) பொறுப்பு போடுவேன், உங்களுக்கு (SC) எல்லாம் பொறுப்பு வழங்க மாட்டேன் எனக் கூறுகிறார். ஒன்று, இதற்கு என்ன தீர்வு எனத் தெரிய வேண்டும், அல்லது எங்களுக்கான பொறுப்பு வேண்டும். காசை வாங்கிக் கொண்டு பொறுப்பு வழங்குகின்றனர்” என ஆக்ரோஷமாகப் பேசியுள்ளார்.

முன்னதாக, விழுப்புரம் மாவட்டத்தில் தவெக பொறுப்புகளுக்கு 15 லட்சம் ரூபாய் வரை வாங்கப்படுவதாக தகவல் வெளியான நிலையில், அங்கு நடைபெற்ற கூட்டம் ஒன்றில், காசு வாங்கிக் கொண்டு பொறுப்பு வழங்கினால், இங்கு இடம் கிடையாது, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: அடுத்த விஜய் நான்தான்.. முழுசா சந்திரமுகியாக மாறிய இளம் நடிகர்.. தயாரிப்பாளர்களிடம் கறார்!
மேலும், கடந்த பிப்ரவரியில் கட்சி தொடங்கிய விஜய், தனது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை அக்டோபரில், விழுப்புரத்தில் நடத்தினார். அப்போது, ஊழலுக்கு எதிரான குரலை விஜய் முன்வைத்தார். ஆனால், கட்சிக்குள்ளே காசு வாங்கும் செய்திகள் வெளியாவது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.