Chocos சாப்பிட்ட குழந்தையின் வாயில் ஊர்ந்த புழு… பெற்றோர் அதிர்ச்சி!

Author: Udayachandran RadhaKrishnan
28 January 2025, 4:59 pm

வேலூர் கஸ்பா பகுதியைச் சேர்ந்த சுபா என்பவர் கடந்த 15-நாட்களுக்கு முன்பு கோயம்புத்தூருக்கு சென்றபோது அங்கு உள்ள “டி மார்ட்” சூப்பர் மார்க்கெட்டில் தனது குழந்தைக்கு சாக்கோ சாக்லேட் ஓட்ஸ் வாங்கி வந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று சாக்கோ சாக்லேட் ஓட்ஸை தனது குழந்தைக்கு சுடு பாலில் கலந்து கொடுத்துள்ளார்.

இதையும் படியுங்க: ’என்ன அண்ணாமலை.. உன்னையும் சேர்த்துதான்..’ நீ கூட களத்துக்கு போறதில்ல.. அன்புமணி பரபரப்பு பேச்சு!

அப்போது அதனை உண்ட சுபாவின் இரண்டரை வயது குழந்தை வாயில் ஏதோ நெளிகிறது என்று பயந்துபோய் கீழே துப்பியுள்ளது. கீழே துப்பிய சாக்கோ சாக்லேட்டில் பெரிய அளவிலான புழு கரு நிறத்தில் ஊர்ந்து சென்றதை கண்ட சுபா பயந்து போய் உள்ளார்.

Chocos

சாக்கோ சாக்லேட் ஓட்ஸ் தயாரிப்பு தேதி 22.10.2024 காலாவதி தேதி 19.07.2025 என அச்சிடப்பட்ட நிலையில் காலாவதி ஆகாத சாக்கோவில் சாக்லேட் புழு இருந்தது அதிர்ச்சி அளிக்ககூடிய ஒன்றாக உள்ளதாகவும், வெதுவெதுப்பான பாலில் கூட புழு சாகாமல் இருந்துள்ளது எனக்கூறி சுபா ஆன்லைன் மூலமாக உணவு பாதுகாப்புத் துறைக்கும் நுகர்வோர் மன்றத்திற்கும் புகார் அளித்துள்ளார்.

Worm Found in Chocos

இது போன்ற தின்பண்டங்களை வாங்கும் தாய்மார்கள் குழந்தைகளுக்கு கொடுக்கும் போது எச்சரிக்கையாக பயன்படுத்த வேண்டும் என்று சுபா தெரிவித்துள்ளார்.

  • sincere thanks to ajith kumar sir shared by arjun das என் மேல நம்பிக்கை வச்சதுக்கு மிக்க நன்றி அஜித் சார்- அர்ஜுன் தாஸ் உருக்கம்