ருசித்து சாப்பிட்ட சாம்பார் சாதத்தில் கிடந்த புழு … பதறிப்போன வாடிக்கையாளர்… வைரலாகும் வீடியோ..!!

Author: Babu Lakshmanan
15 July 2023, 12:11 pm

திருநின்றவூரில் தனியார் ஓட்டலில் வாங்கிய சாம்பார் சாதத்தில் புழு இருந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ஆவடி அடுத்த நெமிலிச்சேரியை சேர்ந்தவர் ரமேஷ் பாபு. இவர் தனது உறவினர்களுடன் திருநின்றவூர் சி.டி.எச் சாலையில் உள்ள பிரபல பெரம்பூர் ஸ்ரீனிவாசா உணவகத்தில் உணவருந்த சென்றுள்ளனர்.

அப்போது அவர்கள், ஸ்பெஷல் மீல்ஸ் மற்றும் சாம்பார் சாதம் ஆர்டர் செய்து காத்திருந்தனர். முன்னதாக, சாம்பார் சாதத்தை மூவரும் பகிர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கும் போது, சாப்பாட்டில் புழு இருந்துள்ளது.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ரமேஷ் பாபு மற்றும் உறவினர்கள் புழுவை அங்கிருந்த ஊழியர்களிடம் காண்பித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து மேலாளரிடம் கேட்ட போது, தவறு நடந்ததை ஒப்பு கொண்டார். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை ஆதாரமாக வைத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஹோட்டலில் சோதனை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…