ஆச்சி ரெடிமேட் பாயாசம் பாக்கெட்டில் சேமியாவுக்கு பதிலாக புழு… வாடிக்கையாளர் அதிர்ச்சி.. ஷாக் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
14 April 2023, 1:50 pm

விழுப்புரத்தில் உள்ள விராட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்த அருண் என்பவர் தனியார் நிறுவனத்தில் அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.

இன்று தமிழ் வருட பிறப்பிற்காக அவரது ஏழு வயது மகள் ஆசையாக கேட்ட பாயசம் செய்வதற்காக வீட்டிற்கு அருகே உள்ள கடையில் பிரபல கம்பெனி ஆன ஆச்சி மசாலாவின் ரெடிமேடு பாயாசம் மிக்ஸ் பத்து ரூபாய் பாக்கெட் வாங்கியுள்ளார்.

வீட்டில் வந்து மனைவியிடம் கொடுக்கவே அவர் பாக்கெட்டை பிரித்து தட்டில் கொட்டிய போது சேமியாவை போலவே எண்ணற்ற புழுக்கள் உயிருடன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே இதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். மேலும் ராமுவின் மனைவி அந்த வீடியோவில் இது நாங்கள் தட்டில் கொட்டி பார்த்தோம் இல்லையென்றால் குழந்தைக்கு செய்து கொடுத்திருந்தால் குழந்தையின் நிலைமை என்னவாகும் என கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உடனடியாக சம்பந்தப்பட்ட ஆட்சி மசாலா கம்பெனி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

https://vimeo.com/817562938

ரெடிமேட் பாயாசம் மிக்ஸில் சேமியாவுக்கு பதில் புழு இருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. விழுப்புரத்தில் இரண்டு தினங்களுக்கு முன்பு அரசுக்கு சொந்தமான ஆவின் நிறுவனத்தில் குல்ஃபியில் ஈ இருந்த வீடியோ வைரலாகி வந்த நிலையில் தற்போது இந்த புழு வீடியோவும் வைரல் ஆகி வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை செயல்படுகிறதா என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.

  • suriya act in venky atluri movie soon before vaadivaasal மீண்டும் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்கும் சூர்யா? அதுவும் இந்த டைரக்டர் படத்துலயா?