ரேஷன் கடையில் புழுக்களுடன் வழங்கிய புளுங்கரிசி : கொந்தளித்த பெண்.. செய்வதறியாது திகைத்த ஊழியர்!!
Author: Udayachandran RadhaKrishnan24 January 2023, 9:49 pm
கரூரில் நியாயவிலை கடையில் புழுக்களுடன் அரிசி – அரிசியை விநியோகம் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நியாயவிலைக் கடைகளில் மாதம்தோறும் விலையில்லா அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கோட்டையண்ணன் கோவில் தெருவில் உள்ள நியாய விலைக் கடையில் கடந்த 2 நாட்களாக அரிசி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அந்த அரிசியை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்றவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அரிசியில் அதிகளவிலான சிறிய அளவு வண்டுகள் இருக்கின்றன.
இந்நிலையில் இன்று காலை முதலே இதே போன்று வண்டுகளுடன் கூடிய அரிசியை விநியோகம் செய்து வந்தார் அந்த கடையின் விற்பனையாளர்.
இந்நிலையில் வண்டுகள் தொடர்பாக புகார் எழுந்த நிலையில் அவற்றை வாங்கிச் சென்ற மூதாட்டி அதனை அந்த விற்பனையாளரிடமே திருப்பி கொடுத்து விட்டுச் சென்று விட்டார்.
இது தொடர்பாக விற்பனையாளரிடம் கேட்ட போது வண்டு இருப்பது தனக்கு தெரியவில்லை என்றும், உயர் அதிகாரியிடம் தகவல் தெரிவித்து இருப்பதாகவும், நாளை அரிசியை திருப்பி கொடுத்தவருக்கு வண்டுகள் இல்லாத அரிசி வழங்குவதாக கூறினார்.