நடிகை சமந்தா தற்போது ஹரி சங்கர் மற்றும் ஹனீஷ் நாராயண் இருவரும் இணைந்து இயக்கும் யசோதா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய 5மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்தப் படம் அறிவியல் கதைக்களத்தில் உருவாகி வருகிறது.
இந்தப் படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார், மலையாள நடிகர் உன்னி முகுந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது யசோதா படத்தின் முன்னோட்டம் வெளியாகி உள்ளது. அதில் சமந்தா தனிமைப்படுத்தப்பட்ட அறையில் வைக்கப்பட்டுள்ளார். முன்னோட்டம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. சமந்தா மற்றுமொரு சுவரசிமான படத்தின் மூலம் ரசிகர்களைக் கவரத் தயாராகி உள்ளார்.
அந்த காட்சியில் சமந்தா கண் விழிக்கிறாள், இதுவரையிலான அவளது உலகம் இனி இல்லை. அவளது சூழல், அவளது உடை, அவளது காலம் மற்றும் பேரமைதி அனைத்தும் ஆச்சர்யாமாக முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கிறது. அவளது இதயதுடிப்பின் சத்தம் அவள் காதை கிழிக்கும் நேரத்தில் அவள் ஜன்னல் கதவை திறக்கிறாள் அங்கு ஒரு புறா அவள் வேண்டும் சுதந்திரத்தை சுவாசிக்கிறது. அவள் அதை பிடிக்க நினைக்கிறாள் என்ன நடந்தது ? இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை:…
அருப்புக்கோட்டையில், கள்ளக்காதலில் இருந்த கணவரை வெறுப்பேற்ற வீடியோ கால் பேசி மனைவி வெறுப்பேற்றிய நிலையில், கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்:…
டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது, தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது என மாநில நிதிநிலை அறிக்கை குறித்து தமிழக பாஜக தலைவர்…
ED சோதனையை சட்ட ரீதியாக டாஸ்மாக் நிர்வாகம் எதிர்கொள்வோம் என மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.…
நடிகை சினோக தனக்கான தனியிடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுள்ளார். சமீபத்தில் விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.…
நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கிறார். ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம்…
This website uses cookies.