திரைத்துறையின் நிலை மாற வேண்டும்… சினிமா விநியோகஸ்தர்களுக்கு ஒய்ஜி மகேந்திரன் வைத்த வேண்டுகோள்..!!

Author: Babu Lakshmanan
11 மே 2022, 9:39 காலை
Quick Share

திரைப்பட உரிமையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் சிறிய பட்ஜெட்டில், சிறிய நடிகர்கள் நடித்து உருவாகும் தரமான படங்களை வெளியிட முன் வரவேண்டும் என கோவையில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் தமிழன் சினி வேர்ல்டு தயாரிப்பில், அரசியல் கதை களம் கொண்டு உருவாகி வரும் ஒரு விரல் புரட்சி எனும் சினிமா படப்பிடிப்பு கோவையில் நடைபெற்று வருகிறது. இளம் இயக்குனர் விவாகி இயக்கத்தி்ல் உருவாகி வரும் இத்திரைப்படத்தில், நடிகர்கள் ஒய்.ஜி.மகேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் கண்ணா,வையாபுரி, ஆர் சுந்தர்ராஜன்,மொட்டை ராஜேந்திரன்,நளினி உட்பட பலர் நடித்து வருகின்றனர்.

கோவையில் பஞ்சாப் தமிழன் என அனைவராலும் அழைக்கபடும் டோனி சிங் தயாரிப்பில் நடைபெற்று வரும் இந்த படத்திற்கான முதல் போஸ்டர் வெளியீட்டு விழா படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்றது. இதில்,படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்க உள்ள கோவையை சேர்ந்த விவாகி, தயாரிப்பாளர் பஞ்சாப் தமிழன் டோனி சிங் மற்றும் நடிகர்கள் ஒய்.ஜி.மகேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் கண்ணா, வையாபுரி, புரொடக்ஷன் மேனேஜர் சாகுல் ஆகியோர் படத்தின் முதல் போஸ்டரை வெளியிட்டு பேசினர்.

அப்போது பேசிய ஒய்.ஜி.மகேந்திரன், தற்போது பெரிய பட்ஜெட் மற்றும் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கே வினியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் முன்னுரிமை அளிப்பதாகவும், இந்த நிலையை மாற்றி, சிறிய பட்ஜெட்டில், சிறிய நடிகர்கள் நடித்து உருவாகும் தரமான படங்களையும் வெளியிட முன் வரவேண்டும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், ஒ.டி.டி.தளங்கள் அனைத்து படங்களையும் வெளியிட முன் வரவேண்டும் எனவும், அப்போது மட்டுமே புதிய இளைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஒரு விரல் புரட்சி படத்தின் தயாரிப்பாளரும்,இதில் முக்கிய ரோலில் நடித்து வரும் பஞ்சாப் தமிழன் டோனி சிங், தமது அரசியல் அனுபவங்களை வைத்து இந்த படத்தை தயாரிக்க முன் வந்ததாக கூறிய அவர், ஜனநாயக கடமையில் பொதுமக்களின் வாக்குகள் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக இந்த திரைப்படத்தை தயாரிப்பதாக அவர் கூறினார்.

பஞ்சாப் தமிழன் சினி வேர்ல்டு தயாரிப்பில் இசபெல்லா எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Woman Aghori ஒட்டுத் துணியில்லாமல் கோவிலுக்குள் நுழைந்த பெண் அகோரி… அனுமதி மறுப்பால் தீக்குளிக்க முயற்சி!
  • Views: - 1061

    0

    0