முதன்முறையாக வெளியான யோகி பாபு மகனின் புகைப்படம்… அச்சு அசல் அவரேதான் : க்யூட் போட்டோ வைரல்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 July 2022, 10:44 am

தமிழ் சினிமாவை பொறுத்தவரை தற்போது முன்னணி காமெடி நடிகர் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் நடிகர் யோகி பாபு தான். ரஜினி, அஜித், விஜய் என முன்னணி தமிழ் நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

ஏராளமான படங்களில் நடித்து வரும் யோகி பாபு, ஒரு படத்தில் ஒரு காட்சியில் ஆவது தோன்றிவிடுவார். இவரின் டைமிங் காமெடிக்காக ஏராளாமான ரசிகர்கள் உள்ளனர்.
பிசிய நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகி பாபு, கடந்த 2020ஆம் ஆண்டு பார்கலி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தையும் பிறந்தது. ஆனால் குழந்தையின் புகைப்படத்தை தனது ரசிகர்களுக்கு தெரியப்படுத்தாமலே இருந்தார்.

இந்த நிலையில் நடிகர் யோகி பாபு, நேற்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய நிலையில்… நடிகை சஞ்சனா சிங் இவருடைய வீட்டிற்கு சென்று தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அப்போது யோகி பாபுவின் மகன் விசாகனுடன் இவர் எடுத்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் பலரும், யோகி பாபுவின் மகன் நன்றாக வளர்ந்து விட்டதாக கூறி தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!