மக்களுக்கு துரோகம் செய்யறீங்க.. மின் வாரியத்தில் ஆபத்து கால நீதினு ஒண்ணு இருக்கு.. அது திமுக அரசுக்கு தெரியாது : பொன். ராதாகிருஷ்ணன்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 July 2022, 9:12 pm

மின் கட்டண உயர்வு விவகாரத்தில் முதல்வர் தனிக் கவனம் செலுத்தி மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என மதுரையில் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை கோ.புதூர் பேருந்து நிலையத்தில் மதுரை மாநகர பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம், நிகழ்வில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், டாக்டர் சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், மின் கட்டண உயர்வால் தொழில் வளமிக்க தமிழகம் தொழிற்சாலைகளை இழந்து வேலை வாய்ப்புகளை இழந்து இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் நடுத்தெருவுக்கு வருவது அதிகமாகும்.

மின் கட்டணம் உயர்ந்தால் பொருட்கள் விலை உயரும், தமிழக மூதல்வர் இவ்விவகாரத்தில் தனிக்கவனம் செலுத்தி மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், மின் வாரிய கடனை அடைக்க வேறு வகையில் சிந்திக்க வேண்டும், இதை செய்யாமல் இருப்பது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகமாகும்.

மின் வாரியத்தில் ஆபத்து கால நீதி என ஒன்று உள்ளது, அதை பயன்படுத்த வேண்டும், ஆள தெரிந்தவர்களுக்கு அது தெரியும், ஆளத்தெரியவில்லையென்றால் அதை கண்டுபிடிக்க முடியாது என கூறினார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!