பேரம் பேசி காசு வாங்குவதை விட பிச்சை எடுக்கலாம் : எவனுக்கும் ஒத்தை பைசா கொடுக்கக்கூடாது… அமைச்சர் துரைமுருகன்!
Author: Udayachandran RadhaKrishnan20 August 2024, 4:16 pm
தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் வேலூர் மாவட்டம் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட “கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் விழாவில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு ஆணைய வழங்க உள்ளார். உடன் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி முன்னிலை வகித்தார்.
அமைச்சர் துரைமுருகன் பேசுகையில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் ஒரு வீடு கட்ட 3 1/2 லட்சத்தை அரசு ஒதுக்குகிறது. இதற்கு சிலர் 10 ஆயிரம், 15 ஆயிரம் கொடு என கேட்பதாக தகவல் வருகிறது. எவனுக்கும் ஒரு ரூபாய் கொடுக்க வேண்டாம். அப்படி யாராவது கேட்டால் புகார் அளியுங்கள் அவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு கொடுக்கும் திட்டத்தில் இல்லாதவர்களிடம் பேரம் பேசி காசு வாங்குவதை விட பிச்சை எடுக்கலாம். எவனுக்கும் நீங்க ஒத்த பைசாவை தர கூடாது கூடாது.
ஆயிரம் ரூபாய் மகளீர் உரிமை தொகை வராதவர்கள் குறித்து பட்டியல் தயார் செய்து வருகிறோம் அவர்களுக்கெல்லாம் விரைவில் வரும்.
காட்பாடி தொகுதியில் இல்லாது என எதுவுமே கிடையாது. எனது தொகுதிக்கு நான் எதுவும் செய்ய தயாராக இருக்கிறேன். ஆனால் எனக்கு கீழே உள்ள தலைவர், கவுன்சிலர் போன்றவர்களும் ஒத்துழைக்க வேண்டும் நான் மட்டும் யோகியனாக இருந்தால் போதாது தமிழக அரசு மக்களின் நலன் பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது, இப்படிப்பட்ட திட்டங்கள் கொண்டு வருவதை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜு நாத் சிங் பாராட்டி சென்றுள்ளார்
எனக்கு உண்ண உணவாக, மூச்சுக்காற்றாக, இரத்த ஓட்டமாக இருப்பது எனது கழக தொண்டர்கள் தான். அவர்களிடம் நான் சில நேரம் கோபித்துக்கொள்வேன் அது என் உரிமை. எல்லாம் துரைமுருகன் பார்த்துக்கொள்வார் என மகிழ்ச்சியோடு போங்க நான் பார்த்துக்கொள்கிறேன் என பேசினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், அத்திக்கடவு அவிநாசி திட்டம் அதிமுக கொண்டு வந்தது அதற்கு திமுக லேபிள் ஒட்டியதாக எடப்பாடி பழனிச்சாமி பேசி இருந்தது குறித்து கேட்டதற்கு, அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.
கலைஞருக்கு நாணயம் வெளியிட்டது குறித்து எடப்பாடி பழனிச்சாமி விவரம் இல்லாமல் பேசுகிறார். இதே போலத்தான் அண்ணாவுக்கு வெளியிட்டார்கள், எம்ஜிஆருக்கு வெளியிட்டார்கள் அப்போதெல்லாம் எடப்பாடிக்கு கண் தெரியவில்லையா? கலைஞரை எதிர் கட்சி எண்ணம் உடையவர்கள் கூட வந்து பாராட்டுகிறார்கள். தமிழ்நாட்டில் மறைந்த தலைவர்கள் குறித்து பேசுவது கிடையாது ஆனால் ஒரு சிலர் மறைந்த தலைவர்களை கூட தாறுமாறாக பேசுகிறார்கள். இதற்கெல்லாம் கால் புணர்ச்சி காட்டக்கூடாது.
தென்பெண்ணை பாலாறு இணைப்பு என்பது என்னுடைய லட்சியம் அதற்காக எப்படியாவது முயற்சி எடுப்பேன் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
சமஸ்கிருதம் அறிவியல் பூர்வமான மொழி சக்தி வாய்ந்த மொழி என ஆளுநர் ரவி பேசியுள்ளார என கேட்டதற்கு, சமஸ்கிருதம் செத்துப்போன மொழி (dead language) அது பேசவே முடியாது என ஆளுநர் ரவிக்கு தெரியாது எனக் கூறினார்