7 மணி நேரத்திற்குள் கோவையில் இருந்து பெங்களூரு செல்லலாம்.. வந்தது வந்தே பாரத் ரயில் : சோதனை ஓட்டம் வெற்றி!!

Author: Udayachandran RadhaKrishnan
27 December 2023, 10:59 am

7 மணி நேரத்திற்குள் கோவையில் இருந்து பெங்களூரு செல்லலாம்.. வந்தது வந்தே பாரத் ரயில் : சோதனை ஓட்டம் வெற்றி!!

8 ரயில் பெட்டிகள் கொண்ட கோவை பெங்களூர் வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் தொடங்கியது ரயிலுக்கு முன்பாக பூஜை செய்து வழிபட்டனர்.

காலை 5 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு சென்றது 11:30 மணி அளவில் பெங்களூர் சென்றடையும் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

பின்னர் மதியம் 1:40 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்பட்டு இரவு 8 மணிக்கு கோவை வரும்.இன்று சோதனை ஓட்டம் நடைபெற்ற பிறகு டிசம்பர் 30-ம் தேதி இந்த ரயில் சேவை துவக்கி வைக்கப்பட்டு ஜனவரி 1-ம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

வந்தே பாரத ரயில் கோவை சேலம் ஓமலூர் தர்மபுரி ஓசூர் பெங்களூர் சென்றடைகிறது.இந்த ரயிலில் முதல் வகுப்பில் 44 பேரும் இரண்டாம் வகுப்பில் 592 பேரும் மொத்தமாக 636 பேர் பயணிக்கலாம் முதல் வகுப்பில் 2350 இரண்டாம் வகுப்பு 1300 ரூபாய் என கூறப்படுகிறது.

கோவை சென்னை வந்தே பாரத் ரயில் நல்ல வரவேற்பு அடுத்து வரும் ஒன்றாம் தேதி முதல் கோவை பெங்களூர் வந்தே பாரத் தினசரி தொடங்கப்படுவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.

  • Udit Narayan viral kiss video ரசிகைக்கு LIVE முத்தம்…மேடையில் பிரபல பாடகரின் லீலை…வைரலாகும் வீடியோ..!