மசூதிகள், மதர்சாவில் தங்கலாம்.. அனைத்து சமுதாயத்தினருக்கும் காயல்பட்டினம் இஸ்லாமியர்கள் அழைப்பு!!!
தென்மாவட்டங்களில் கனமழை புரட்டு போட்டு பெய்து வருகிறது. இந்த நிலையில் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டு, வீட்டில் இருக்க முடியாமல் தவிக்கும் குடும்பத்தார்களுக்கு, அவர்கள் இருக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள இடங்களில் தங்க வைக்க காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவை ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டு உள்ள அறிவிப்பில், “கிழக்கே சுலைமான் நகரை ஒட்டியுள்ள பாதிக்கப்பட்ட சகோதர சகோதரிகள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மற்றும் ஆயிஷா சித்தீக்கா மகளிர் கல்லூரி மண்டபத்தில் தங்கலாம்! இங்கு தங்கியுள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: சுலைமான் TNTJ : 9042869396, ஆதம் சுல்தான்: 6383514163
மஜ்லிஸில் புகாரி ஷரீஃப் சபையைச் சுற்றியுள்ள பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் அச்சபை மண்டபத்தில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொடர்பு தொலைபேசி எண்: A.J.சொளுக்கு:9486812440 மேற்குப் பகுதியில் பெரியநெசவு தெருவின் மேற்குப் பகுதியை ஒட்டியுள்ள பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் விசாலாக்ஷி அம்மன் கோவில் தெருவை ஒட்டி உள்ள அனைத்து சமுதாய மக்கள் ஆகியோர்களுக்கு பெரிய நெசவு தெருவில் உள்ள ஹமீதா பெண்கள் மதரசா மண்டபத்தில் தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
காயல் மத்திய பகுதியை ஒட்டியுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜலாலியா கல்யாண மண்டபத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மண்டபம் போதவில்லை என்றால் அடுத்துள்ள மெய்தீன் பள்ளி வளாகத்திலும் தங்க வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்பு எண்: அபு குளவி: 9361020556, மஹ்மூத் சுல்தான்: 9500256645
மொகுதும் ஜும்மா பள்ளியை ஒட்டிய மொகுதும் மக்தப் மண்டபத்தில், அதை சுற்றியுள்ள பகுதிகளான பாதிக்கப்பட்ட சிவன் கோவில் தெரு, சாஹித் தம்பி தோட்டம் மற்றும் அனைத்து சகோதர சமுதாய மக்கள் அனைவரும் இங்கு தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேற்கண்ட இடத்தில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, மற்றைய தேவைகளுக்கு பேரவையின் தொடர்பானவர்கள் உங்கள் தேவைக்கேற்ப தொடர்பு கொள்வார்கள்.
அவசர உதவிகளுக்கு ஜாஹீர் – 9994097217, அப்துர்ரஹ்மான்- 81229 229 91, சம்சுதீன் – 7094161339, நஜீப் – 8608981720, மாஜா – 9677553933, ஹஸன் – 9791294093, சம்சுதீன் – 7397505484″ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
யுபிஎஸ்சி தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. யுபிஎஸ்சி சர்வீஸ் தேர்வு, ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட பணிகளுக்காக யுபிஎஸ்சி…
ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணி லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்தின் “கூலி” திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு…
This website uses cookies.