இனி 6 மணி நேரத்தில் கோவையில் இருந்து சென்னை செல்லலாம் : வெளியான சூப்பர் அறிவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan28 March 2023, 1:09 pm
கோவையில் இருந்து சென்னை செல்வதென்றால் பயணிகள் கடுப்பாகிவிடுவார்கள். காரணம் 8 முதல் 9 மணி நேரம் பயணம் செய்ய வேண்டியதாக இருக்கும்.
இதனால் பெரும்பாலான பயணிகள் இரவு நேர பயணத்தையே விரும்புகின்றனர். 8 மணி நேரம் தூங்கிக் கொண்டு சென்றால் அதிகாலை சென்னை சேர்ந்து விடுவதால் சலிப்பு தெரியாது என்று புறப்படுகின்றனர்.
அதே போல பண்டிகை காலங்களில் சற்று சிரமம். விடுமுறைக்கு வேண்டும் ஊருக்கு செல்பவர்கள் கடும் சிரமத்தை சந்திக்க நேரிடும்.
ஆனால் இனி அந்த கஷ்டத்தை அனுபவிக்க வேண்டாம். கோவை – சென்னை இடையே புதிய வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கவுள்ளது. வரும் ஏப்ரல் 8ஆம் தேதி தமிழ்நாடு வரும் பிரதமர் நரேந்திர மோடி இந்த புதிய ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.
கோவை – சென்னை இடையே உள்ள 495.28 கி.மீ தூரத்தை இந்த வந்தே பாரத் ரயில் 6 மணிநேரம் 10 நிமிடங்களில் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 6 மணிக்கு கோவையில் புறப்படும் இந்த வந்தே பாரத் ரயில் மதியம் 12.10 மணிக்கு சென்னை சென்றடையும். பின்னர், மதியம் 2.20 மணிக்கு சென்னையில் புறப்படும் இந்த ரயில் 8.30 மணிக்கு கோவை சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ரயில் புதன்கிழமையை தவிர்த்து வாரத்தின் மற்ற அனைத்து நாட்களும் இயங்கும் எனவும் கோவை – சென்னை வழித்தடத்தில் உள்ள திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனவும் கூறப்படுகிறது.
இதனால் பயணிகள் தங்கள் விரயங்களை சேமிக்கலாம் எனவும், பொதுவாக 7 முதல் 9 மணி நேர பயணம் ஆகும். சதாப்தி ரயில் பயண நேரம் 7 மணிநேரமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.