உங்களுக்கு ஓட்டு இல்லை… வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் அதிர்ச்சி : வாக்காளர்கள் வாக்குவாதம்!

Author: Udayachandran RadhaKrishnan
19 April 2024, 3:52 pm

உங்களுக்கு ஓட்டு இல்லை… வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் அதிர்ச்சி : வாக்காளர்கள் வாக்குவாதம்!

மக்களவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 11 மணி நிலவரப்படி தமிழ்நாடு முழுவதும் 25.02 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சத்தியமங்கலம் பகுதியில் தீவிர வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இன்று காலையில், சத்தியமங்கலம் கோணமூலை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி பாகம் எண் 255, 256 ஆகிய இரண்டிலும் பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களிக்கச் சென்று உள்ளனர்.

அப்போது, ”உங்களுக்கு ஓட்டு இல்லை, உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை” என அதிகாரிகள் கூறியதால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதே போல் இந்த வாக்குசாவடியில் மட்டும் 80 ,க்கும் மேற்பட்டபேருக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என கூறப்படுகிறது. அதேசமயம், இறந்தவர்களின் பெயர்கள் பட்டியலில் இருப்பதாக மக்கள் குற்றம்சாட்டினர்.

மேலும் படிக்க: அதிக வாக்குப்பதிவு மகிழ்ச்சியே.. செல்லுமிடமெல்லாம் வரவேற்பு : நெகிழ்ச்சியில் சௌமியா அன்புமணி!

வாக்காளர் அட்டையுடன் ஆதார் கார்டு இணைத்தும் தங்களது பெயர் பட்டியலில் இல்லை என கூறி தொகுதி அளவிளான அதிகாரி சுசிலா விடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் வாக்களிக்க முடியாமல் அங்கு இருந்த தொகுதி அதிகாரி சுசிலா விடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதேசமயம், எங்கள் பெயர்கள் எப்படி பட்டியலில் இல்லாமல் போகும்… பெயர்களை நீக்கியது யார் என்று கேட்டு வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதனால் அந்த வாக்குச் சாவடி அமைந்துள்ள பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி