உங்களுக்கு தைரியம் அதிகம் : காயத்ரி ரகுராமை புகழ்ந்து அறிவுரை கூறிய பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 January 2023, 5:01 pm

பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று கூறி பாஜகவில் இருந்து கனத்த இதயத்துடன் விலகுவதாக நடிகை காயத்ரி ரகுராம் அறிவித்தார்.காயத்ரி ரகுராம் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து கட்சி பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுவதாக கட்சி தலைமை அறிவித்தது. இந்த நிலையில் பாஜகவில் இருந்து நீக்கி என்னை மானபங்கம் செய்ததற்கு நன்றி என காயத்ரி ரகுராம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ஆபாசம் பேச்சாளரின் ராஜினாமா இன்னும் ஏற்கப்படவில்லை. ஒரு பெண்ணைப் பற்றி தவறாகப் பேசும் ஒரு தலைவருக்கு Z வகைப் பாதுகாப்பு.ராஜினாமா செய்ய சரியான முடிவை எடுத்தேன். பெண்கள் பாதுகாப்பு சூப்பர். என் தொழிலைக் கெடுத்ததற்கு நன்றி, என் பெயரைக் கெடுத்ததற்கு நன்றி, என் பெண்மையை அவமானப்படுத்தியதற்கு நன்றி, என்னை மானப் பங்கம் செய்ததற்கு நன்றி.

என் 8 வருட சேவை, கடின உழைப்பு மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டதற்கு நன்றி, எல்லாவற்றையும் பறித்த பிறகு என்னை தூக்கி எறிந்ததற்கு ஒரு பெரிய நன்றி’ என்று நீண்ட பதிவை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், பாஜகவின் முக்கிய தலைவருமான வானதி சீனிவாசன் காயத்ரி ரகுராமுக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.

அவர் பேசும்போது, கொஞ்சம் உணர்ச்சிவசப்படக்கூடியவர். தவறு என்றால் உடனடியாகச் சொல்லக்கூடிய தைரியம் மிகுந்த பெண்மணி, ஆனால், கட்சிக்கு என்று ஒரு கட்டுப்பாடு இருக்கிறது. உங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு, கட்சிக்குள் இருக்கக்கூடிய அமைப்பு ரீதியான விஷயத்தைப் பின்பற்றித்தான் நியாயம் பெற வேண்டும். அதை விட்டு விட்டு தலைவர்களைப் பொதுவெளியில் விமர்சிப்பதன் மூலமாக, பிரச்சினையை வெளியே கொண்டு வரலாமே தவிர, நீதி கிடைக்குமா என்பதை பார்க்க வேண்டும்.

பிரச்சினைகளை எப்படி லாவகமாக, தைரியத்தோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதை நாம்தான் தெரிந்துகொள்ள வேண்டும். எனக்கும் இதுபோன்ற பல்வேறு சிக்கல்கள் வந்திருக்கின்றன. அதையெல்லாம் பொறுமையாகவும், சட்டரீதியாகவும் தகர்த்தெறிந்திருக்கிறேன். அதனால் அந்த நம்பிக்கையைவிட்டு வெளியே செல்லக்கூடாது’ என்று அறிவுரை கூறியுள்ளார்.

  • Mookuthi Amman 2 latest shooting update அடடே! விரதம் இருந்த நயன்தாரா…கோலாகலமாக ஆரம்பித்த மூக்குத்தி அம்மன் 2 பட பூஜை.!