அய்யய்யோ, தமிழிசை தப்பு பண்ணிட்டாங்க.. தெரிஞ்சிருந்தா நானே போன் பண்ணி சொல்லியிருப்பேன் : அமைச்சர் துரைமுருகன் கிண்டல்!

Author: Udayachandran RadhaKrishnan
29 March 2024, 3:46 pm

அய்யய்யோ, தமிழிசை தப்பு பண்ணிட்டாங்க.. தெரிஞ்சிருந்தா நானே போன் பண்ணி சொல்லியிருப்பேன் : அமைச்சர் துரைமுருகன் கிண்டல்!

தமிழகத்தில் தென் சென்னை மக்களவை தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் முன்னாள் பாஜக தலைவரும், முன்னாள் தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தராஜன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் ஜெயவர்தன் போட்டியிடுகிறார்.

கடந்த 2019 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட தமிழச்சி தங்கபாண்டியன் தான் வெற்றி பெற்று இருந்தார். கடந்த மக்களவை தேர்தலில் , தூத்துக்குடி தொகுதியில் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட்டு திமுக எம்பி கனிமொழியிடம் தோல்வி கண்டார்.

பின்னர் புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும், தெலுங்கானா ஆளுநராகவும் தமிழிசை சௌந்தரராஜன் பொறுப்பேற்று இருந்தார். ஆனால் பதவி காலம் உள்ள நிலையில் திடீரென தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து மீண்டும் பொதுத்தேர்தலில் தமிழிசை சௌந்தரராஜன் களமிறங்குகிறார்.

இந்நிலையில், அமைச்சர் துரைமுருகன் தென் சென்னையில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய துரை முருகன் , போயும் போயும் தென் சென்னையிலா தமிழிசை போட்டி போடுறாங்க.? ஐயோ பாவம் தெரிஞ்சிருந்தா நான் தமிழிசைக்கு போன் போட்டு பேசி இருப்பேன் .

நீங்க நிக்க போறீங்கனா வேற எதாவது தொகுதி கூட சொல்லிருக்கலாம். இந்த தென் சென்னை தொகுதி திமுக ஜெயிக்கிறதுக்காக பொறந்த தொகுதி.

அரசனை நம்பி புருஷனை கைவிட்டு விட்டார். இங்க உள்ளூர்லேயே ஓணான் பிடிக்க தெரியாத ஒருத்தன் வெளியூரில் யானை பிடிக்க போனானாம் என கிண்டலாக விமர்சனம் செய்தார் அமைச்சர் துரைமுருகன்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ