கோவை கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரியின் டீன் மற்றும் உயிர்வேதியல் துறை தலைவராக இருந்து வருபவர் மதன்சங்கர் .
இவரிடம் முனைவர் பட்டம் படிக்கும் மாணவர் ஒருவர் , மதன்சங்கர் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாக பாரதியார் பல்கலை கழகம் மற்றும் கல்லூரி நிர்வாகம் ஆகியவற்றில் புகார் அளித்தார்.
இந்த புகார் குறித்து விசாரணை மேற்கொள்ள ஐ.சி.சி கமிட்டி அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதில் மாணவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து இருப்பது உறுதியானது.
இதைதொடர்ந்து கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் டீன் மற்றும் உயிர்வேதியல் துறை தலைவரான மதன்சங்கர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஐசிசி கமிட்டி விசாரணை அறிக்கையும், பாதிக்கப்பட்ட மாணவருக்கும், கல்லூரி டீனும் இடையே நடைபெற்ற ஆடியோவும் வெளியாகியது. இதில் மாணவரை , பேராசிரியர் மதன்சங்கர் சமரசபடுத்தும் முயற்சியில் ஈடுபடுவது பதிவாகி இருந்தது.
விசாரணை அறிக்கையில் முனைவர் பட்ட மாணவரை இந்தோனேசியா, சென்னை உட்பட பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று கல்லூரி டீன் மதன்சங்கர் பாலியல் தொந்தரவு செய்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் ஐ.சி.சி கமிட்டி விசாரணை நடத்திய பின்பும் கல்லூரி டீன் மதன்சங்கர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட முனைவர் பட்ட மாணவர் தெரிவித்தார்.
கடந்த ஓன்றரை ஆண்டு காலமாக மதன்சங்கர் பாலியல் ரீதியாக அத்துமீறினார் எனவும் மதரீதியாக, ஜாதி ரீதியாகவும் பேசும் வழக்கம் கொண்டவர் அவர் எனவும், அவர் சொல்லும் படியாக கேட்காமல் இருந்தால் கையெழுத்து போட மாட்டார் எனவும் பாதிக்கப்பட்ட மாணவர் தெரிவித்தார்.
ஐ.சி.சி கமிட்டி விசாரணை நடத்தி முடித்து இருக்கும் நிலையில் , டீன் மதன்சங்கர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், அவர் ஆசிரியர் பணியில் இருக்க கூடாது, பிற மாணவர்கள் பாதிக்கப்பட கூடாது எனவும், ஏற்கனவே இவரால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் முனைவர் பட்ட மாணவர் குற்றம்சாட்டினார்.
இது குறித்து கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரி நிர்வாகத்திடம் கேட்ட போது, முதல் கட்ட விசாரணை நடைபெற்று முடிந்து இருப்பதாகவும், அடுத்தகட்ட விசாரணைக்கு பின்பு சட்டரீதியான நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தனர்.
கல்லூரியில் முதல்வருக்கு அடுத்த நிலையில் இருந்த டீன் மதன்சங்கர் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி நடவடிக்கைக்கு உள்ளாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.