வந்த வேகத்தில் ரஜினியின் 169வது படத்தில் இணைந்த இளம் நடிகை… கசிந்த கதாபாத்திரம் : மருமகனாகிறார் மகளின் முன்னாள் காதலன்?!!
Author: Udayachandran RadhaKrishnan15 March 2022, 1:17 pm
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் அடுத்த படத்தை மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. இந்த படத்தை இளம் இயக்குநர் நெல்சன் இயக்குவதாக சமீபத்தில் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
இதையடுத்து படத்தில் யார் நடிக்க உள்ளார் என்பதை பற்றி நாளொரு செய்திகள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. ஏற்கனவே இந்த படத்தல் இளம் நடிகர், நடிகைகள் நடிக்க உள்ளதாக பேச்சுகள் அடிப்பட்டு வந்தது.
இந்த நிலையில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரியங்கா அருள்மோகன் நடிக்க உள்ளது உறுதியாகியுள்ளது. டாக்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆன பிரியங்காவை நெல்சன் தான் அறிமுகப்படுத்தினார்.
தொடர்ந்து சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன், சிவகார்த்திகேயனுடன் டான், ஆதினி போன்ற படங்களில் நடித்துள்ளார். முதல் படத்திலேயே ஹிட் நாயகி என்ற அந்தஸ்து இவருக்கு கிடைத்துள்ளது. மேலும் ரசிகர்கள் மனதில் சுலபமாக நுழைந்து விட்டார்.
இந்த நிலையில் ரஜினியின் 169வது படத்தில் கமிட்டாகியுள்ள இவர், ரஜினிக்கு மகளாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பிரியங்காவுக்கு ஜோடியாக லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே நெல்சன் சினிமா கேரியரில் நுழையும் போது, சிம்புவை வைத்துதான் படத்தை இயக்கினார். வேட்டை மன்னன் படத்தை இயக்கினார், ஹன்சிகா, ஜெய், பூனம் கவுர் உட்பட பல்வேறு நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர். ஆனால் படம் வெளியாகவில்லை. இந்த படத்திற்கு யுவன் இசையமைதிருந்தார்.
இந்த நிலையில் மீண்டும் சிம்புவை ரஜினியின் புதிய படத்தில் நடிக்க வைக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.