“லேட் என்ட்ரி..” சீனியர்களுக்கே டஃப் கொடுத்த 97வது வார்டு உறுப்பினர் நிவேதா சேனாதிபதி… கோவை பதவியேற்பு விழாவில் ‘பரபர’!!

Author: Babu Lakshmanan
2 March 2022, 12:27 pm

கோவை: கோவையில் இன்று மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நடைபெற்று வரும் சூழலில், 97வது வார்டு உறுப்பினரும் திமுக பொறுப்பாளரிம் மகளுமான நிவேதா சேனாதிபதி சாவகாசமாக நிகழ்ச்சிக்கு வந்தார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சியில் உள்ள நூறு வார்டுகளில் வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர்களுக்கான பதவியேற்பு விழா இன்று மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் நடைபெற்று வருகிறது.

மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா புதிய மாமன்ற உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

காலை 1O மணிக்கு நிகழ்ச்சி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டதும் அனைத்து உறுப்பினர்களும் விக்டோரியா ஹாலில் ஆஜராகினர்.

இதில் 97வது வார்டு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட திமுக.,வை சேர்ந்த நிவேதா சேனாதிபதி மட்டும் வரவில்லை. இவரது தந்தை திமுக மாவட்ட பொறுப்பாளராக உள்ள சேனாதிபதி.

ஏற்கனவே நிவேதா கோவை மேயர் வேட்பாளராக அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இதனிடையே 2O உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்யும் வரை நிவேதா நிகழ்ச்சி அரங்கத்திற்கு வரவில்லை. பின்னர் சாவகாசமாக நிகழ்ச்சிக்கு வந்தார். தொடர்ந்து அவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அதிகாரிகள் நிவேதாவை அமர வைத்தனர்.

சீனியர்களை கண்டுகொள்ளாமல் தனது இருக்கையில் அமர்ந்திருந்த நிவேதவை தேடித் தேடி வந்து புன்னகையுடன் பேச தொடங்கினர் திமுக சீனியர்கள்.

மேயர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பின் போதே இப்படி ‘டஃப்’ கொடுக்கிறாரே என்ற பேச்சுகளை மாமன்ற அலுவலகத்தில் கேட்க முடிந்தது.

  • Ajith reunite Again With Adhik அஜித்துடன் மீண்டும் கூட்டணி… உருவாகும் மார்க் ஆண்டனி 2.. ஆதிக் முடிவு!!
  • Views: - 1650

    0

    0