லேடீஸ் கோச்சில் ஏறிய 25.. தனியாக தவித்த 23.. அடுத்த நொடியில் நிகழ்ந்த கொடூரம்!

Author: Hariharasudhan
25 March 2025, 5:54 pm

தெலுங்கானாவின் செகந்திராபாத்தில், ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை அளிக்க முயன்றதால், இளம்பெண் ரயிலில் இருந்து குதித்துள்ளார்.

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மெட்சால் பகுதியில் 23 வயது இளம்பெண் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், இவர் கடந்த மார்ச் 22ஆம் தேதி, செகந்திராபாத் செல்லும் ரயிலில் ஏறியுள்ளார். மேலும், அவர் ரயிலின் பெண்கள் பெட்டியில் பயணம் செய்துள்ளார்.

அப்போது, அவருடன் பயணித்த இரண்டு பெண்கள் ஒரு நிறுத்தத்தில் இறங்கியுள்ளனர். இதனால், அந்த இளம்பெண் மட்டும் தனியாக ரயிலில் இருந்துள்ளார். அந்த நேரத்தில், ஒரு 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் பெண்கள் பெட்டியில் ஏறியுள்ளார். எனவே, கோச்சை விட்டு இறங்கும்படி இளம்பெண் இளைஞரிடம் கூறியுள்ளார்.

இதனை இளைஞர் ஏற்க மறுத்துள்ளார். அதோடு, அந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்யவும் அந்த இளைஞர் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பயந்து போன அந்தப் பெண், அவரிடம் இருந்து தப்பிப்பதற்காக ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்துள்ளார்.

Train Travel

இதில், அவரது முகம் உள்பட உடம்பில் பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அந்த வழியாகச் சென்றவர்கள் அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையும் படிங்க: அதிர்ச்சி.! ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் நடிகையின் நிர்வாண வீடியோ லீக்..ஆண் நண்பரின் சதியா.!

மேலும், அந்த இளம்பெண்ணின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது. தொடர்ந்து, அந்த இளைஞரை தற்போது பார்த்தால்கூட அடையாளம் காட்டுவேன் என அப்பெண் போலீசில் கூறி புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Bharathiraja son Manoj death பெரும் சோகத்தில் ‘பாரதிராஜா’ குடும்பம்…கண்ணீரில் திரையுலகம்.!
  • Leave a Reply