கடற்கரையில் இளம்பெண் கூட்டுப் பாலியல்.. காதலன் கண்முன்னே நடந்த கொடூரம் : கன்னியாகுமரியில் பயங்கரம்!!!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பொன்னப்ப நாடார் காலனி பகுதியை சேர்ந்த 24 வயதுடைய வாலிபர் பி.டெக் படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்தபடி ஐ.டி.கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கும். 12-ம் வகுப்பு முடித்துவிட்டு நீட்தேர்வுக்கு ஆயத்தமாகி வரும் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த 19 வயது மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காதலனும், காதலியும் சந்திக்க விரும்பினர், ஆனால் இரவு 9:30 மணியை தாண்டி விட்டது காதல் மீதான ஈர்ப்பால் இருவரும் எப்படியாவது சந்திக்க துடித்தனர், அதற்கான இடம் சொத்த விளை கடற்கரையை தேர்ந்தெடுத்தனர், அதே சமயத்தில் வெளியே செல்லும்போது குடும்பத்தினருக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக சற்று மனநிலை பாதிக்கப்பட்ட தன் தம்பியை காதலி ஸ்கூட்டரில் அழைத்து சென்றார்.
அதேபோல் காதலனும் ஸ்கூட்டரில் சொத்தவளை கடற்கரைக்கு சென்றனர் அங்கு ஸ்கூட்டரை நிறுத்திய இடத்தில் அருகில் தம்பியை நிற்கச் சொல்லிவிட்டு காதலி தன்னுடைய காதலனுடன் கடற்கரைக்கு கைகோர்த்தபடி சொன்னார்.
அப்போது இரவு 10:30 மணி ஆகிவிட்டது கடற்கரையில் அமர்ந்து காதலனும் காதலியும் உற்சாகமாக பேசி சிரித்து கொண்டிருந்தனர்,
அந்த சமயத்தில் அங்கு 2 வாலிபர்கள் வந்தனர். அப்போது காதலனிடம் பேச்சு கொடுத்தபடி, உங்களுடன் இருக்கும் அழகியுடன் நாங்கள் சந்தோசமாக இருக்க வேண்டும். எவ்வளவு பணம் வேண்டுமா என கேட்டுள்ளனர்,
அதற்கு நாங்கள் இருவரும் காதல் ஜோடி, என்னுடன் பேசிக் கொண்டிருப்பவர் மாணவி. எனவே எங்களை விட்டு விடுங்கள் என காதலன் கெஞ்சியுள்ளார். ஆனால் வாலிபர்கள் அதனை பொருட்படுத்தவில்லை.
அந்தஇளம்பெண்ணை அனுபவிக்கும் ஆசையிலேயே குறி யாக இருந்தபடி கேள்வி கணைகளை தொடுத்தனர். வாலிபர்களின் அத்துமீறல் தொடரவே, நான் உங்களுக்கு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என காதலன் கூறியோதோடு வாலிபர்களில் ஒருவருக்கு ரூ 10 ஆயிரமும் அனுப்பியுள்ளார்.
ஆனாலும் வாலிபர்கள் பெண் மோகத்தில், காதலனை தாக்கி விரட்டி விட்டு இளம் பெண்ணை மறைவான பகுதிக்கு தூக்கி சென்று பலாத்காரம் செய்தனர்,
இதற்கிடையே காதலன் ஓடிச்சென்று அருகில் உள்ள கிராமத்தில் இருந்து சிலரை அழைத்து வந்தார். அங்கு வந்து பார்த்தபோது இளம் பெண் அலங்கோலமான நிலையில் கதறி துடித்தார்.
பின்னர் இதுகுறித்து சுசிந்திரம் போலீசில் காதலன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர்கள் பள்ளம் வடக்குத்தெரு பகுதியை சேர்ந்த லியோராஜ் (வயது 34), பள்ளம் லூர்துகாலனி பகுதியை சேர்ந்த சகாய சீமோலியன் (34) ஆகிய 2பேர் என்பது தெரியவந்தது.
பின்னர் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் அதிரடியாக கைது செய்தனர். சொத்தவிளை கடற்கரையில் இரவில் பேசிக்கொண்டிருந்தபோது காதலனை தாக்கி மாணவியை பலாத்காரம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சுற்றுலாதலத்தில் இரவு நேரத்தில் கவல்துறையினர் ரோந்து பணியினை துரிதப்படுத்த வேண்டும் எனவும் இது போன்று இரவு நேரங்களில் கடற்கரைக்கு தனிமையில் வரும் காதலர்களுகளை காவல்துறையினர் எச்சரித்து அனுப்ப வேண்டும் இது போன்ற சுற்றுலாத்தலங்களில் காவல் துறையே இல்லாததே இது போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.