திருச்சி ; திருச்சியில் கல்லூரி மாணவியை கொலை செய்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா அய்யம்பாளையம் ஓமலூர் தெருவை சேர்ந்தவர் அழகு பாண்டியன். இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். இவரது மனைவி முத்தம்மாள். இவர்களுக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
இதில் இரண்டாவது மகள் ஜோஷிதா (வயது 17).
இவர் திருச்சி தென்னூர் பாரதி நகரில் உள்ள தனது அத்தை மகாலட்சுமி (வயது 40) என்பவரது வீட்டில் தங்கி, சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு படித்து வந்தார். மேலும் அத்தை மகாலட்சுமியின் மளிகை கடையிலும் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மளிகை கடைக்கு வேலைக்கு சென்ற ஜோஷிதா மாலை வீட்டுக்கு வந்தார். வீட்டில் தனியாக இருந்த ஜோஷிதாவின் செல்போன் நீண்ட நேரமாக ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால், சந்தேகம் அடைந்த அவரது அக்கா பவித்ரா வீட்டுக்கு வந்து பார்த்த பொழுது, ஜோஷிதா கழுத்து மற்றும் முதுகு பகுதியில் ஆயுதங்களால் குத்தப்பட்டு பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.
உடனடியாக தில்லைநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த தில்லைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜோஷிதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தில்லை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டனர்.
முதற்கட்ட விசாரணையில் திருச்சியை சேர்ந்த லோகேஷ் ராஜா என்ற 17 வயது சிறுவன், ஜோஷிதா இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இருவரும் அக்கா, தம்பி உறவு முறை கொண்டவர்கள் என கூறப்படுகிறது.
இதன் காரணமாக இவரது பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். எனவே, ஜோஷிதா லோகநாதனிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். இதனால், ஆத்திரமடைந்த லோகேஷ் ராஜா சம்பவத்தன்று ஜோஷிதா வீட்டுக்கு சென்று அவரை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கத்தியால் குத்தி கொலை செய்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பராசக்தி ஹீரோ சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் “பராசக்தி” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் சில…
ஸ்ரீக்கு என்ன ஆச்சு? சமீப நாட்களாக நடிகர் ஸ்ரீ குறித்துதான் சமூக வலைத்தளங்களில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. நடிகர் ஸ்ரீ …
பிரதமர் மோடியை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா திடீரென புகழ்ந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளம் ஒன்றுக்கு பிரமேலதா…
சர்ச்சையை கிளப்பிய வீடியோ “சிறகடிக்க ஆசை” என்ற பிரபலமான டிவி தொடரில் வித்யா என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமாக…
நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் நாகசைதன்யா பின்னாளில் பிரிந்தனர். அதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், நாகர்ஜூனாவின்…
துருவ் விக்ரம் - அனுபமா ஜோடி… மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் “பைசன்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம்…
This website uses cookies.