கூட்டுப் பாலியல் வன்கொடுமை: சிகிச்சை மறுக்கப்பட்ட பெண்: மருத்துவருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்…!!

Author: Sudha
17 August 2024, 2:39 pm

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள பாப்பநாடு பகுதியைச் சேர்ந்தவர் இளம்பெண். இவர், கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், விடுமுறைக்காக அந்த பெண் சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, அவரது வீட்டுக்கு வந்த கவிதாசன் (25) என்ற இளைஞர் வீட்டில் இருந்த இளம்பெண்ணை மிரட்டியுள்ளார். தொடர்ந்து, ஆட்கள் நடமாட்டம் இல்லாத கொட்டகை பகுதிக்கு மிரட்டி அழைத்துள்ளார்.அங்கு அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து கூட்டுப் பலாத்காரம் செய்துள்ளனர்.

ஒரத்தநாடு ஏ.எஸ்.பி சகுனாஸ் மற்றும் எஸ்.பி ஆசிஷ் ராவத் ஆகியோர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட கவிதாசன், திவாகர் (27), பிரவீன் (20), (17) வயது சிறுவன் உள்ளிட்ட நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர்.

தஞ்சாவூரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், அவருக்கு உடனடி சிகிச்சை அளிக்க மறுத்த பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்தது ஏன் என ஒரத்தநாடு உரிமையியல் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவர் மீது ஏன் வழக்குப்பதிவு செய்ய கூடாது எனவும் சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டது குறித்து வரும் 27 ஆம் தேதி நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!