13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…தட்டிக்கேட்ட தாய்க்கு கொலைக்கு மிரட்டல்: போக்சோவில் கைதான அண்ணன்-தம்பி..!!

Author: Rajesh
15 April 2022, 3:27 pm

கடலூர்: சிதம்பரம் அருகே பள்ளி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 20 வயது இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த சிலம்பி மங்கலத்தை சேர்ந்தவர் ஜெகதீசன் என்பவரது மகன் பார்த்திபன். இவர் அதே பகுதியை சேர்ந்த பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார்.

1 வருடமாக சிறுமியை காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, அந்த சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்து அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார். இதுகுறித்து, சிறுமி தனது தாயிடம் தனக்கு நடந்தவற்றை கூறியுள்ளார். இந்த சம்பவத்தால் பதறிப்போன அந்த சிறுமி இதுகுறித்து அவரது தாயிடம் தெரிவித்துள்ளார்.

உடனே அந்த சிறுமியின் தாய் பார்த்திபனுடன் இதைப்பற்றி தட்டிக் கேட்டதற்கு அந்த இளைஞரின் அண்ணன் மோகன்ராஜ் என்கிற சரவணன் அந்தப் பெண்ணிடம் உன் மகளை என் தம்பிக்கு கட்டி கொடுத்துவிடு இல்லையெனில் உன்னையும், உன் மகளையும் கொன்று விடுவேன் என மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் பயந்துபோன அந்த சிறுமியின் தாய் இதுகுறித்து புதுச்சத்திரம் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் பார்த்திபன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

மேலும் அவரது அண்ணன் சரவணன் கொலை மிரட்டல் வழக்கில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 1481

    0

    0