இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் கேட்ட இளைஞர்…! மழுப்பலான பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின்…!!

Author: kavin kumar
9 February 2022, 10:56 pm

கரூர் : கரூரில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலினிடம் இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் கேட்ட இளைஞரின் கேள்விக்கு பதிலாக, இன்னும் 4 வருடம் உள்ளது தானே கொடுத்து விடுவோம் என்று மழுப்பலாக பதில் அளித்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில் உள்ள, ஒரு மாநகராட்சி, மூன்று நகராட்சிகள், 8 பேரூராட்சிகள் ஆகியவைகளுக்கான நகரமைப்பு உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ம் தேதி நடைபெறுவதையொட்டி, திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் எம்.எல்.ஏ வும், முதல்வர் மு.க.ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின், கரூர் அருகே வேலாயுதம்பாளையம் பகுதியில் புகளூர் நகராட்சி, புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சிகளுக்குட்பட்ட பகுதி மக்களிடம் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக வாக்குகள் சேகரித்தார்.

பத்திரிக்கையாளர்கள் மற்றும் வீடியோகிராபர்களுக்கு கலைஞர் மற்றும் சன் டி.வி களுக்கும், முரசொலி, தினகரன் நாளிதழ்களுக்கு மட்டுமே முழு அளவில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்க அனுமதி, மற்ற நிருபர்களை குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டுமே அனுமதி என்கின்ற விதத்தில், இடையே ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் எழுதிவிடுவார்கள் மற்றும் ஒளிபரப்பி விடுவார்கள் என்று கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், தமிழக மின்சாரத்துறை அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி, கட்டுப்பாட்டுகளுடன் கூடிய நிபந்தனைகளுடன் செய்தியாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், கரூர் அருகே உள்ள வேலாயுதம்பாளையத்தில் உதயநிதி ஸ்டாலின், திறந்த வேனில் பிரச்சாரம் மேற்கொண்ட போது, திமுக ஆட்சி அமைத்த சில மாதங்களில் பல்வேறு நலத்திட்டங்கள் செய்து முடித்ததாக கூறி ஒரு பெரிய லிஸ்ட்டே போட்டு கூறி வந்த போது, இல்லத்தரசிகளுக்கு ரூ ஆயிரம் வழங்கப்படும் திட்டம் குறித்து இளைஞர் கேட்டதற்கு, கொடுத்து விடுவோம் அது தான் 4 வருடங்கள் நம்மிடம் ஆட்சி இருக்கின்றதே என்று மழுப்பலாக பதில் அளித்து சென்றார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

  • gangai amaran singing for bharathiraja video viral on internet பாட்டு பாடி பாரதிராஜாவை ஆற்றுப்படுத்திய கங்கை அமரன்… மனதை நெகிழ வைத்த வீடியோ…