வரனுக்காக தேடி தேடி கிடைக்காத பெண் : விரக்தியில் 2K கிட்ஸ் எடுத்த விபரீத முடிவு!!
Author: kavin kumar24 January 2022, 3:26 pm
கள்ளக்குறிச்சி : சங்கராபுரம் அருகே திருமணத்திற்கு பெண் கிடைக்காததால் விரக்தியில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் அமுல்ராஜ் (24). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். ரமேஷ் கடந்த 4 மாதத்திற்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். இவரின் உறவினர்கள் கடந்த 4 வருடமாக திருமணத்திற்காக பெண் பார்த்து கொண்டிருந்தனர். பெண் கிடைக்காததால் அமுல்ராஜ் மனமுடைந்தர். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த நெல் வயலுக்கு அடிக்க வைத்திருந்த கலைக்கொல்லி மருந்தை குடித்துள்ளார்.
மயக்க நிலையில் இருந்த அமுல்ராஜை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக சங்கராபுரம் மற்றும் கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அமுல்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து இவரது உறவினர் முருகேசன் என்பவர் சங்கராபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார். திருமணத்திற்காக பெண் கிடைக்காத விரக்தியில் வாலிபர் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி கிராம மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.