கட்டுனா மாமனை மட்டும் தான் கட்டுவேன் : ஒரே மேடையில் இரு பெண்களுடன் இளைஞர் திருமணம்..(வீடியோ)!
Author: Udayachandran RadhaKrishnan25 April 2025, 5:46 pm
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் – பத்ருஷாவ் தம்பதியினரின் இரண்டாவது மகனான அத்ரம் சத்ருஷாவ்.
இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த ஜங்குபாய் என்ற பெண்ணை நான்கு ஆண்டுகளாக காதலித்து வருகிறார். இந்த நிலையில் கெரமேரி மண்டலத்தில் உள்ள சங்கி கிராமத்தைச் சேர்ந்த உறவினரான மற்றொரு இளம் பெண் சன் தேவியை ஒரு வருடமாக காதலித்து வந்தார்.
சன் தேவிக்கும்- சத்ருஷாவ்க்கும் 15 நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது. இதனை அறிந்த முதல் காதலி ஜங்குபாய் தன்னையும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றார்.
இரண்டு பெண்களும் பெரியவர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் சத்ருஷாவை திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து திருமண பத்திரிக்கை அச்சிடப்பட்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டு உறவினர்கள் முன்னிலையில் இரண்டும் பெண்களுக்கு தாலிக்கட்டி கொண்டு திருமணம் செய்து கொண்டார்.
காத்து வாக்குல ரெண்டு கல்யாணம்!#Trending | #MarriedLife | #Tirupati | #viralvideo pic.twitter.com/AjePU51ZzU
— UpdateNews360Tamil (@updatenewstamil) April 25, 2025
அதேபகுதியில் ஒரு இளைஞர் இரண்டு இளம் பெண்களை மணந்தார். இந்த திருமணம் சமூக ஊடகங்களிலும் வைரலாகியது. தற்போது சத்ருஷாவ் தனது இரண்டு காதலிகளான ஜங்குபாய் – சன் தேவி திருமணம் செய்து கொண்ட வீடியோ வைரலாகி உள்ளது.