இளம்பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர் : தட்டிக் கேட்டவர்களுக்கு நேர்ந்த கதி.. ஷாக் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
19 January 2023, 12:58 pm

இளம் பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞரை தட்டி கேட்ட பெண்ணின் உறவினர்களை விறகு கட்டையால் தாக்கிய இளைஞர்கள்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தட்டாரபட்டியில் இரண்டு இளம் பெண்கள் தங்கள் வீட்டு முன்பாக இருந்த சின்டெக்ஸ் டேங்க்ங்கில் குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது அந்த வழியாக வந்த இளைஞர் ஒருவர் இளம்பெண்கள் குளித்ததை செல்போனில் வீடியோ எடுத்ததாக இளம் பெண்கள் தங்களது உறவினர்களிடம் தெரிவித்தனர்.

பெண்களின் உறவினர்கள் இளைஞரை தட்டி கேட்டதால் இளைஞர் அவர்களிடமிருந்து தப்பி சென்று விட்டார். தப்பி சென்ற இளைஞர் தனது ஊரான மாரம்பாடிக்கு சென்று பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களை அழைத்து வந்து விறகு கட்டையால் பெண்கள் மற்றும் ஆண்களை தாக்கியதால் மூன்று ஆண்கள் இரண்டு பெண்கள் பலத்த காயம் அடைந்தனர்.

வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

https://vimeo.com/790704209

விறகு கட்டையால் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் வேடசந்தூர் போலீசார் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்
  • Close menu